கொழும்பு: சாந்த கிளேயார் கல்லூரி, இந்து மாணவர் மன்றம், 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை). 155 பக்கம், புகைப்படங்கள், விலை:குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19 சமீ. 1964ஆம் ஆண்டில் மேற்படி பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்து மாணவர் மன்றம் இது. வாழ்த்துச் செய்திகள், ஆசியுரைகள், பாடசாலை போட்டி முடிவுகள், பரிசு பெற்றோர் விபரம் ஆகிய விடயங்களுடன் புதுமை புகுத்திய நக்கீரர் (எஸ்.சிவலிங்கராஜா), மாணவர் எதிர்கொள்ளும் உளம்சார் பிரச்சினைகள் (கோகிலா மகேந்திரன்), கலைக்கோயில் (வானதி காண்டீபன்), அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் (மனோன்மணி சண்முகதாஸ்), நவராத்திரி (த.விமலேஸ்வரி), அவதாரமும் நற்போதனைகளும் (மு.ஞானசேகரம்பிள்ளை) ஆகிய அறிவியல் கட்டுரைகளும், பாடசாலை மாணவர்களின் ஆக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. இம்மலரின் இதழாசிரியர் குழுவில் சு.மயூலா, ஜெ.ரேணுகா, ம.ஸ்ரீ.நிவேதா, இ.கிஷாந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
14914 எச்.எஸ்.இஸ்மாயில்: ஒரு சமூக அரசியல் ஆய்வு.
எம்.எஸ்.எம்.அனஸ். புத்தளம்: இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம், 1வது பதிப்பு, மே 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (4), 188 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.