14390 வணிகவியற் கட்டுரைகள்.

மலர் வெளியீட்டுக்குழு. யாழ்ப்பாணம்: வர்த்தக ஒன்றியம், சென். ஜோன்ஸ் கல்லூரி, 1வது பதிப்பு, 1986. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி).(8), 89 பக்கம், விலை: ரூபா 15.00, அளவு: 24.5×19 சமீ. இத் தொகுப்பு நூலில் இலங்கையில் கம்பெனி அமைப்பு, இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தின் அமைப்புரீதியான மாற்றங்கள், முகாமைத்துவம், விஞ்ஞான ஆய்வு முறைகளில் நோக்கலின் பயன்பாடு, தொழிற் சங்கங்கள், இலங்கையின் தேசிய வருமானக் கணிப்பீட்டிற்கும் அதன் சென்மதி நிலுவைக் கணிப்பீட்டிற்கும் இடையிலான சில தொடர்புகள், பங்கு வழங்கலும் பறிமுதலும் மீளவழங்கலும், விஞ்ஞானத்தில் ஒப்புமை முறை, மூலதனச் சந்தை, இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி ஒரு மைல் நோக்கு, கணக்கீட்டு எடுகோள்கள் அல்லது எண்ணக் கருக்கள், விஞ்ஞானத்தில் முறையியலின் பங்கும் அதன் அபிவிருத்தியும், வர்த்தக வங்கிகளின் நடைமுறை வைப்புப் பற்றிய ஓர் நோக்கு, இலங்கையின் பொதுப் படுகடன் அமைப்பு, தற்சமனாக்கும் பேரேடு ஆகிய 15 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலின் வெளியீட்டுக் குழுவில் கல்லூரி மாணவர்களான சு.சத்தியானந்தன், செ.யு.நரேந்திரபாலன், லெ.ந.சுரேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23646).

ஏனைய பதிவுகள்

14347 குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்.

எஸ்.குருபாதம். சென்னை 600098: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத் தூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (சென்னை 14: பாவை பிரின்டர்ஸ், 16 (142), ஜானி ஜான்கான்

12408 – சிந்தனை: தொகுதி VI இதழ் 3 (நவம்பர் 1994).

இராசரத்தினம் சிவசந்திரன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1997. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை). (9), 102 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 23.5×18.5

12300 – கல்வி முகாமைத்துவம்(தொடர் 1).

எம்.செல்வராஜா. மஹரகம: கல்வி முகாமைத்துவ அபிவிருத்தி ஆலோசனைக் கழகம், கௌரி வெளியீட்டு இல்லம், 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 11: இராஜேஸ்வரி அச்சகம், 18, பிரின்ஸ் வீதி). 44 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

14653 மூசாப்பும் ஒரு முழு வெயிலும்.

எஸ்.ஜனூஸ். (இயற்பெயர்: ஜனூஸ் சம்சுதீன்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (கொழும்பு 10: யூ.டீ.எச். பிரின்டர்ஸ், 277/6, முதலாவது டிவிசன், கிங்ஸ் கோர்ட், மருதானை, ). ix,

12728 – புத்திமான் பலவான் (சிறுவர் கதைகள்).

திருச்செல்வம் தவரத்தினம். யாழ்ப்பாணம்: தி. தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, காரைநகர், 1வது பதிப்பு, ஐப்பசி 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல.681,காங்கேசன்துறை வீதி). vi, 56 பக்கம், விலை: ரூபா 150.,