14433 அரசகரும மொழிகள் தேர்ச்சி மட்டம் 2: தமிழ்.

எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). (8), viii, 234 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 25×19 சமீ., ISBN: 978-955-9180-38-8. இந்நூல் இரண்டாம் மட்ட அரசகரும மொழித் தேர்ச்சியில் சித்தியடைய வேண்டிய அரசகரும உத்தியோகத்தர்களுக்காக எழுதப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பேச்சு மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் எழுத்துக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பேச்சுத்தமிழ் எட்டாம் பாடத்திலிருந்து எழுத்துத் தமிழாக மாறும் விதம் கூறப்பட்டுள்ளது. ஆகவே ஆரம்பத்திலுள்ள பாடங்களை ஆசிரியரின் உதவியோடும் இறுவட்டின் உதவியோடும் பேசப்பழகவும். இந் நூலில் எல்லா வாக்கிய அமைப்புகளும் தரப்படவில்லை. தேவையானவைகள் மட்டுமே தரப்பட்டுள்ளன. மாணவர்கள் மேலும் தமது அறிவை ஆசிரியரின் உதவியோடும், ஏனைய நூல்களைக் கற்றும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழில் உச்சரிப்பு மாற்றம் கருத்தை மாற்றிவிடுமாதலால், உச்சரிப்பைச் சரியாக உச்சரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் களனிப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறை பேராசிரியராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65468).

ஏனைய பதிவுகள்

12773 – ஆரண்ய வாசம்: கவிதைத் தொகுப்பு.

பாகீரதி கணேசதுரை (புனைபெயர்: மாவை பாரதி). தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், வைத்திய கலாநிதி சுப்பிரமணியம் வீதி). xiv, 102 பக்கம், சித்திரங்கள், விலை:

Youtubers On Onlyfans Only Fans Now!

BEST ONLYFANS GIRLS To Adhere To FOR Warm ONLY Enthusiasts CONTENT Greatest Onlyfans: Highlighted This Calendar month Riley Kwums – OnlyFans Lady With Totally Good

14149 நல்லைக்குமரன் மலர் 2006.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). x, 136 + (48) பக்கம், புகைப்படங்கள்,

12030 – சுவாமி கெங்காதரானந்தஜீ அவர்களின் மணிமொழிகள்.

கெங்காதரானந்தஜீ (மூலம்), வே.ந.சிவராசா (தொகுப்பாசிரியர்). சென்னை 600005: குமரன் பதிப்பகம், 13/2 கஜபதி தெரு, திருநெல்வேலி, இணை வெளியீடு, கொழும்பு 12: வே.ந.சிவராசா, ஜீ.யூ.1-3, டயஸ் பிளேஸ், சிவன் கோவிலடி, 1வது பதிப்பு, ஜுன்