14438 தமிழ் உரைநடைத் தொகுப்பு (க.பொ.த. உயர்தரம்).

த.துரைசிங்கம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, G.L. 1/2, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (8), 166 பக்கம், விலை ரூபா 120., அளவு: 22×14 சமீ. 1997ஆம் ஆண்டு முதல் நடைபெறும் க.பொ.த. உயர்தர பரீட்சைக்குரிய பாட நூல் இதுவாகும். இதில் கட்டுரை ஆசிரியர்கள் பற்றிய குறிப்பு, அரும்பத விளக்கம், பயிற்சி வினாக்கள், உரைநடை வளர்ச்சிப் பாங்கு தொடர்பான கட்டுரை, ஆகிய அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் பல்வேறு தமிழறிஞர்களின் உரைநடைப் பாங்கு அவர்களது தேர்ந்த படைப்பாக்கங்களின் வழியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருத்தொண்டர் பெரியபுராண வசன முகவுரை (ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்), தமிழ் பாஷைக்கு உள்ள குறைகள் (பாரதியார்), தமிழர் கொள்கை (மறைமலை அடிகள்), மஹாகவி பாரதியார் (வ.ரா.), கல்வி (வி.கல்யாணசுந்தரனார்), இலக்கியச் சுவை (சுவாமி விபுலானந்தர்), ஆசிரியரை அடைந்தது (உ.வே.சாமிநாதையர்), தமிழும் பிற மொழியும் (பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை), பண்பாடு (ராஜாஜி), ஓய்வுநேரம் (சி.என்.அண்ணாதுரை), தம்பிக்கு- கடிதம் (மு.வரதராசன்), பாட்டும் ஓசையும் (பேராசிரியர் வி. செல்வநாயகம்), பகிரதப் பிரயத்தனம் (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை), கலையும் காட்சியும் (ஏ.எம்.ஏ.அஸீஸ்), பிணைக்கப்பட்ட கடனை விட வெளிமுதலீட்டை வரவேற்பதே நலம் (ஏ.என்.சிவராமன்) ஆகிய 15 கட்டுரைகள் மாதிரிக்கொன்றாகத் தரப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக தமிழ் உரைநடை வளர்ச்சிப் பாங்கு, அருஞ்சொல் பொருள் விளக்கம், பயிற்சி வினாக்கள் ஆகியன தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 31016).

ஏனைய பதிவுகள்

12279 – அற்புதமான நீரைப் பராமரிப்போம்.

சரத் அமரசிறி (ஆங்கில மூலம்), சீரங்கன் பெரியசாமி (மொழிபெயர்ப்பாளர்). நுகேகொட: இலங்கை இயற்கை ஒன்றியம், 546/3, வட்ட மாவத்தை, கங்கொடவில, 1வது பதிப்பு, ஜுன் 2008. (கண்டி: கிரியேட்டிவ் பிரின்டர்ஸ் அன்ட் டிசைனர்ஸ், இல.

12459 – கரவை விக்னேஸ்வராக் கல்லூரி: பவளவிழா 1917-1992 சிறப்பு மலர்.

12459 கரவை விக்னேஸ்வராக் கல்லூரி: பவளவிழா 1917-1992 சிறப்பு மலர். ஆ.சுப்பிரமணியம் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: பழைய மாணவர் சங்கம், கரவை விக்னேஸ்வராக் கல்லூரி, கரவெட்டி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம்,

14115 கண்டி-கட்டுக்கலை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ மீனாட்சி சோமசுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக மலர்.

கே.வி. இராமசாமி (ஆசிரியர்). கண்டி: அகிலம் பதிப்பகம், 308, டீ.எஸ்.சேனநாயக்க வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (64) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14848 தென்திசை அதிபருக்கு ஓர் அதிபரின் அஞ்சல்.

பொ.கனகசபாபதி. கனடா: அமரர் பொ. கனகசபாபதி நினைவு வெளியீடு, ஜனவரி 2015. (கனடா: பிரின்ட் பாஸ்ட்). xi, 110 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 978-955- கனடா மண்ணில்

14389 வணிக புள்ளிவிபரவியல் : மாதிரி எடுப்பும் புள்ளிவிவர அனுமானமும்: க.பொ.த.உயர்தரம்.

பொன்னுத்துரை ஐங்கரன். யாழ்ப்பாணம்: பொன்னுத்துரை ஐங்கரன், இணுவில் தெற்கு, இணுவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 1998. (கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403, 1/1, காலி வீதி). (4), 134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

14064 கந்தபுராண நவநீதம்.

ஸ்ரீ காசிவாசி சி.செந்திநாதையர். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம், 411/1, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1969. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம்). (3), xviii, 145 பக்கம், விலை: ரூபா