சோதிநாயகி பாலசுந்தரம், விக்னேஸ்வரி செல்வநாயகம், வானதி காண்டீபன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). 220 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 390., அளவு: 24×18 சமீ., ISBN: 978- 955-659-549-9. ஏழாம் தர மாணவர்களுக்குரிய இத்தமிழ் மொழிப் பாடநூலில் அந்தரே கதைகள், ஆறு, கடமை, காட்டு விலங்குகள், யாம் ஐவோம், காந்தியடிகள் கடிதம், தமிழ்த் தட்டச்சின் தந்தை, செந்தமிழ் போற்றிய சேரன், சிலேடை, பென்சிலின் கதை, உயிர் காக்கப் பயிர் காப்போம், ஈசன் உவக்கும் இன்மலர், கடலும் கிணறும், கருங்காற் குறிஞ்சி, படைப்பின் இரகசியம், பொய் சொல்லாதே, வீழ்ந்த ஆலமரம், பிள்ளை அழுத கண்ணீர், வெண்ணிலாவே, ஒழுக்கம் உடைமை, புதிய அத்திசூடி ஆகிய 21 பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. இன்பத் தமிழ் தொடரில் இரண்டாவதாக வெளிவந்துள்ள குமரன் வெளியீடு. குமரன் புத்தக இல்லத்தினரின் 737ஆவது பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது.
13A13 – சைவப் பிரகாசிகை: ஐந்தாம் புத்தகம்.
ச.குமாரசுவாமிக் குருக்கள். யாழ்ப்பாணம்: ச.கு.வைத்தியேசுவரக் குருக்கள், அச்சுவேலி, 9வது பதிப்பு, ஆனி 1954, 7வது பதிப்பு, நந்தன வருடம் தை 1953, 1வது பதிப்பு, மார்ச் 1933. (பருத்தித்துறை: சிவஸ்ரீ வைத்தீசுவரக் குருக்கள், கலாநிதியந்திரசாலை).