பத்மா எஸ். குணரட்ண (மூலம்), ஹம்ஸானந்தி ஜீவாதரன் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661,665,675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, 2012. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (12), 13-136 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-30-3803-6. இந்நூல் பாரிசவாதம் பற்றிய விடயங்களைப் பரந்த அளவில் உள்ளடக்குவதுடன் பாரிசவாத நோயாளிகளைப் பராமரிப்பவர்களின் நீண்டகால தேவைப் பாட்டினையும் பூர்த்திசெய்கின்றது. இந்நூல் வெளியீடானது, இலங்கைத் தேசிய பாரிசவாதச் சங்கத்தினரால் நடாத்தப்பட்டு வரும் பல்வேறு செயற்பாடுகளில் ஒன்றாகும். பாரிசவாதத்தை ஏற்படாது தடுப்பதற்காகவும் சிறந்த கவனிப்பைக் கொடுப்பதற்காகவும் இந்நூல் துறைசார் அறிவுரையினை வழங்குகின்றது. அறிமுகம், குணங்குறிகள், நோய் ஏற்படாது தடுத்தல், நோய் நிர்ணயம், சிகிச்சையும் தாதியர் கவனிப்பும், புனருத்தாரணம், உடற்பயிற்சி சார் சிகிச்சை, தொடர்பாடல், தொழிற்பயிற்சிசார் சிகிச்சை, போசணையும் உடற்பயிற்சியும், மனநல ஆலோசனைகள், நீண்டகாலப் பராமரிப்பும் சமூக உதவியும் ஆகிய பன்னிரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. டாக்டர் பத்மா எஸ். குணரட்ண இலங்கைத் தேசிய பாரிசவாதச் சங்கத்தின் தலைவராக 2010-2012 காலப்பகுதிகளில் பணியாற்றியவர்.