14486 பொது முதலீடு 1990-1994.

கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு. கொழும்பு: தேசிய திட்டமிடல் திணைக்களம், கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1990. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி). (4), 157 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ. பொது முதலீட்டுத் திட்ட வரிசையில் வெளியிடப்படும் 1990-1994ஆம் ஆண்டுக்கான இந்த வெளியீடு, இலங்கையின் பொருளாதாரம் புதுப்பிக்கப்பட்ட இயக்க ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு காலப்பகுதியில் முன்வைக்கப்படுகின்றது. அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான அரசாங்கத்தின் முழுமையான பொருளாதார உபாயத்தையும் கொள்கைகளையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் இவ்வறிக்கை விளக்குகின்றது. இது பொருளாதார கண்ணோட்டமும் செயற்பாடும், அரச துறையினது மறுசீரமைப்பு, பொது முதலீட்டு நிகழ்ச்சித் திட்டம் 1990-1994 ஆகிய மூன்று அத்தியாயங்களையும் அதைத் தொடர்ந்து அரச மூலதனச் செலவின ஒதுக்கீடு 1990-1994 அறிக்கையையும் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23613).

ஏனைய பதிவுகள்

12163 – பத்தினி வழிபாடு.

சி.கணபதிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: சி. கணபதிப்பிள்ளை, தமிழாசிரியரும் சோதிடரும், அட்டப்பள்ளம், நிந்தவூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1978. (யாழ்ப்பாணம்: விபுலானந்த அச்சகம்). (2), 34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. மட்டக்களப்பின்

12121 – அருணகிரிநாத சுவாமிகளருளிய கந்தரநுபூதி.

இரா.சபாநாயகம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: கதிர்காம யாத்திரீகர் தொண்டர் சபை, 1வது பதிப்பு, ஜுலை 1970. (கொழும்பு 12: நியூ லீலா அச்சகம், 33, சென் செபஸ்தியன் மேடு). (4), 73 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

14369 இந்து நாதம்: 1997.

கணேசன் சாந்தகுமார் (இதழாசிரியர்). கொழும்பு 4: இந்து மாணவர் மன்றம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு: யாசீன் பிரின்டர்ஸ்). (88) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19.5

12168 – முருகன் பாடல்: இரண்டாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

12145 – திருக்கோவையார்(மூலம்)

மாணிக்கவாசகர் (மூலம்). யாழ்ப்பாணம்: க.கி. நடராஜபிள்ளை, 1வது பதிப்பு, ஆடி 1942, (யாழ்ப்பாணம்: கமலாசனி அச்சு நிலையம்). 32+135+28 பக்கம், விலை: 50 சதம், அளவு: 11×14 சமீ. வித்துவான் சி.கணேசையரின் முகவுரையுடன் கூடிய

14079 மேலைப்புலோலி நா.கதிரைவேற்பிள்ளையின் ; சைவபூஷண சந்திரிகை.

நா.கதிரைவேற்பிள்ளை (மூலம்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: பருத்தித்துறை நண்பர்கள், கல்வி, சமூக நலன்சார் அமைப்பு, 3வது பதிப்பு, ஓகஸ்ட் 2017, 2வது பதிப்பு, 1902. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).