திருச்செல்வம் தவரத்தினம். கொழும்பு 6: இனிய தென்றல் பதிப்பகம், 135, கனல்பாங்க் ரோட், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை). xii, 69 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-0254-37-8. க.பொ.த. உயர்தர வகுப்பில் விஞ்ஞான தொழில்நுட்பவியல் துறையில் கற்கும் மாணவர்களின் கல்வித் தேவையை அடிப்படையாகக் கொண்டு உயிர்வளத் தொழில்நுட்ப முறைமைகளும் (Bio Resource Technology), உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியலும் (Bio System Technology) ஆகிய இரு அலகுத் தேர்ச்சி மட்டங்களுக்கு அமைவாக எழுதப்பட்ட நூல். இந்நூலில் கடலடிநிலவுருவவியலும் பிரதான கடல் வலயங்களும், நீர், மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி முறைகள், கப்பலோட்டமும் மாலுமி சாஸ்திரமும், கடல் தகவல்களைத் தெரிவிக்கும் சமிக்ஞை கொடிகள் (வர்ணப் படங்களில்) ஆகிய பாடங்கள் இடம்பெற்றுள்ளன. பாடத்திட்டம் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளது.
14389 வணிக புள்ளிவிபரவியல் : மாதிரி எடுப்பும் புள்ளிவிவர அனுமானமும்: க.பொ.த.உயர்தரம்.
பொன்னுத்துரை ஐங்கரன். யாழ்ப்பாணம்: பொன்னுத்துரை ஐங்கரன், இணுவில் தெற்கு, இணுவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 1998. (கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403, 1/1, காலி வீதி). (4), 134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,