14559 அத்லாண்டிக் மகா சமுத்திரத்தில் கரையொதுங்கும் துறவாடைகள்.

தமிழ் உதயா (இயற்பெயர்: பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா). தமிழ்நாடு: நன்செய் பிரசுரம், அபுபேலஸ், திருவாரூர் சாலை, திருத்துறைப் பூண்டி 614713, 1வது பதிப்பு, ஒகஸ்ட் 2017. (சென்னை 600005: சாய் தென்றல் பிரிண்டர்ஸ்). 80 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-930475- 1-4. பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா எனும் இயற்பெயர் கொண்ட தமிழ் உதயா, ஆரம்பகாலத்தில் தமிழ்ப்பிரியா, தமிழ்மதி, தமிழினி ஆகிய புனை பெயர்களிலும் தனது கவிதைகளை ஊடகங்களில் வழங்கி வந்தவர். 1996இல் ஆசிரிய சேவையில் இணைந்த இவர், வவுனியா மாவட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய பின்னர் புலம்பெயர்ந்து தற்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார். தமிழ் உதயாவின் இந்நூலிலுள்ள கவிதைகள் மிகை யதார்த்தவாதப் பண்பு (சர்ரியலிசம்) கொண்டவை என்று தனது முன்னுரையில் கூறும் அனஸ், அவரது ஆழ்மன எண்ணங்களின் வெளிப்பாடுகளாக இக்கவிதைகள் அமைவதாகக் குறிப்பிடுகின்றார். தமிழ் உதயாவின் ஒவ்வொரு கவிதையும் ஒரு சிறு கதையையே சொல்லிவிடும் என்கிறார். ரசனை நிறைந்த வாழ்வின் எல்லா உணர்வுகளையும் தமிழ் உதயாவால் சொல்ல முடிகின்றது. வாழ்வை கவிதைகளின் சொற்களால் மூடியபடி அவரது கவிதைகள் பயணிக்கின்றன.

ஏனைய பதிவுகள்

14297 மண்-நீர்: தேசிய கண்காட்சி-நீரேந்துப் பரப்புகளைப் பாதுகாத்தல்: ஞாபகார்த்த மலர்.

மலர்க் குழு. கொழும்பு: மேல்மட்ட நீர்த்தேக்க பிரதேச முகாமைத்துவ திட்டம், சூழலியல் இயற்கை வளங்கள் அமைச்சு, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (இலங்கை: அரசாங்க அச்சகம், கொழும்பு). viii, 75+91 பக்கம், புகைப்படங்கள், விலை:

14152 நல்லைக்குமரன் மலர் 2009.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2009. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). xii, 172 + (48) பக்கம், புகைப்படங்கள்,

13A22 – பிரதேச வரலாற்று மூலங்கள்: ஒரு நூல்வழித் தேடல்: தீவகம்.

என்.செல்வராஜா. லண்டன்: யாழ்.தீவக ஒன்றியம், பிரித்தானியா, 2வது பதிப்பு, மே 2018, 1வது ஜேர்மன் பதிப்பு, செப்டெம்பர் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). v, 129 பக்கம்,