14599 காலநதி: கவிதைத் தொகுப்பு.

வட்டக்கச்சி வினோத். கிளிநொச்சி: தொலைநோக்கி, வட்டக்கச்சி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xiv, 66 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 18.5×12.5 சமீ.,ISBN: 978-955-43466-0-4. யாழ்ப்பாணத்தில் பிறந்து, வடபகுதியின் நீரேந்துப் பிரதேசமான இரணைமடுக்குளக் கரையில் அமைந்துள்ள வட்டக்கச்சியை வாழ்விடமாகக் கொண்டவர் வினோத். சமூகவலைத்தளங்களில் தன் கவிதைகளால் அறிமுகமானவர். இது நூலுருவில் வெளியாகிய இவரது முதலாவது கவிதைத் தொகுதி. தனக்குத் தெரிந்த தமிழில் எளிமையான வரிகளைத் தொடுத்து கவிதை படைக்கும் இவரை முகப்புத்தகமே அறிமுகப்படுத்தியது. காலநதி இவரது முதலாவது நூலாக வெளிவந்தது. போராட்டம், புனர்வாழ்வு என்று எல்லாத் தமிழ் இளைஞர்களையும் போல இக்கவிஞனையும் தொட்டுப் போன ஒன்றே. கவிதை இவரது பாடசாலை முடிவுக் காலத்தில் தொடங்கி போர்காலம், சிறைக் கூடம் என்பவற்றில் தனது அப்பியாசப் புத்தகத்தில் எழுத்துக்களாக தொடர்ந்ததாகக் குறிப்பிடுகின்றார். முகப்புத்தகம் இவருடைய பாதையில் புதிய திருப்பத்தையும் இலக்கிய வட்டத்தையும் அறிமுகம் செய்திருந்தது. இவரது முதல் பாடல் வரிகளாக குப்பிளான் கன்னிமார் அம்மன் கோயிலில் வெளியீடு செய்யப்பட்ட “கருணை அழகே கௌரியம்மா” என்னும் இறுவெட்டில் சுதர்சன் அவர்களின் இசையில் தமிழகப் பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடி இருந்தார். தமிழகத்தின் கந்தப்பூக்கள் யுகபாரதி அவர்கள் இவரது ஹைக்கூ கவிதைகளை சீர்மைப் படுத்தி ஹைக்கூ எழுதக் கற்றுத்தந்ததாகக் குறிப்பிடுகிறார்.

ஏனைய பதிவுகள்

14811 வண்டொன்று இரு மலர்கள்(நாவல்).

எம்.சி.ஜெஸீல். கொழும்பு 13: சபிகலா வெளியீடு, 250-BG 3, ஆட்டுப்பட்டித் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1987. (கொழும்பு 13: ஸபீனா அச்சகம், 250-BG 3, ஆட்டுப்பட்டித் தெரு). (8), 67 பக்கம், விலை:

12548 – செந்தமிழப் பயிறசி மாலை: ஆறாம் ஏழாம் வகுப்புகளுக்குரியது.

சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு. கோப்பாய்: செல்வி சௌந்தரம் சந்தனநங்கை கந்தப்பு, விரிவுரையாளர், மகளிர் அரசினர் ஆசிரிய கலாசாலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1953. (யாழ்ப்பாணம்: அர்ச் பிலோமினா அச்சகம், 102, மெயின் வீதி). (2),

12661 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1972.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, தபால் பெட்டி இலக்கம் 590, 1வது பதிப்பு, மார்ச் 1973. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி).

12778 – மழையில் நனையும் மனசு(கவிதைகள் ).

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா. கல்கிசை: பூங்காவனம் இலக்கிய வட்டம், 21நE, ஸ்ரீ தர்மபால வீதி, மவுன்ட் லவீனியா, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). 120 பக்கம், விலை: ரூபா 400., அளவு:

12923 – அமரர் உயர்திரு சு.பற்குணம்: நினைவு மலர்.

மலர்க் குழு. கொழும்பு 4: பழைய மாணவர் சங்கம், இந்துக் கல்லூரி, இல.77, லோரன்ஸ் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1991. (அச்சக விபரம் தரப்படவில்லை). (36) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14060 அறுபத்துமூவர்

சி.அப்புத்துரை. யாழ்ப்பாணம்: அமரர் காலிங்கர் நடராசா அந்தியேட்டித் தின நினைவு வெளியீடு, இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12.5 சமீ. நாயன்மார்