14615 தீக்கங்குகள் (கவிதைத் தொகுதி).

வே.ஐ.வரதராஜன் (மூலம்), வரதராஜா வித்தியாபரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுலை 2015. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xiv, 46 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ. “37 வருட அரசசேவை அனுபவம், மனம்கூச வைக்கும் சிறுமைகளும் ஏமாற்றங்களும் மிக்க வாழ்வு தந்த தரிசனம், வாசிப்பின் பேறாய் வாய்த்த பின்புல வீச்சு, என்பன என்னை எழுது எழுது எனத் தூண்டின” எனக் கூறும் வே.ஐ.வரதராஜனது ஆரம்பகாலக் கவிதைகள் மரபு சார்ந்தவையும் பக்திச்சுவை மிகுந்தவையுமாகும். இவருடைய “என் கடன்” கவிதைத் தொகுதியிலும் “தீக்கங்குகள்” என்ற இக்கவிதைத் தொகுதியிலும் உள்ள கவிதைகள் மரபை உடைத்துக் கொண்டு நவீனத்துவப் பிடிப்புடன் முகிழ்ந்தவையாகும். சராசரியான நடுத்தரக் குடும்பப் பின்புலத்தில் தோன்றிய வரதன்-தன்னைச் சூழ உள்ள மனிதர்களை, அவர்தம் உறவுகளை, உணர்வுகளைக் கையகப் படுத்தி அரிய கவிதைகள் பலதை நமக்குத் தந்துள்ளார். அத்துடன், அரச உத்தியோகம் தந்த அனுபவங்களையும் சமூக நிலைப்பட்ட தாக்க வலுவுடன் இவரால் தர முடிந்திருக்கிறது. இவரது அண்மைக்காலக் கவிதைகள் துல்லியமானவை. படிமச் செழுமையுடன் நவீன கவிதைக்கே உரிய சகல பண்புகளையும் கொண்டு விளங்குகின்றன. வாசிப்பும் ரசனையுமே தனது வாழ்வின் பேறாகக் கருதி வாழ்ந்து வந்த இவ்வரிய மனிதரின் சடுதியான முடிவு மிகுந்த துயரத்தைத் தருகிறது. இவரது இழப்பு தமிழுக்கும் தமிழ் ரசனைக்கும் ஏற்பட்ட தவக்குறைவாகும்” (க.சட்டநாதன்). இந்நூல் 51ஆவது ஜீவநதி பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12124 – ஆலய வழிபாட்டில் அதிசய அனுபவங்கள்.

சந்தனா நல்லலிங்கம். கொழும்பு 4: சந்தனா நல்லலிங்கம், 9, பாலாம்பிகை நமசிவாய இல்லம், மிலாகிரிய அவென்யூ, 1வது பதிப்பு, மே 2017. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 110 பக்கம், விலை: ரூபா 500.,

12793 – பூதத்தம்பி இசை நாடகம்.

த.கலாமணி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்கழி 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). xii, 48 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5 x

14018 ஐம்பது ஆண்டு பாராளுமன்ற அனுபவம்(50 Years as Lobby Correspodent).

எஸ்.தில்லைநாதன். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், த.பெட்டி 160, 1வது பதிப்பு, மார்ச் 2014. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் வீதி). xvii, 226 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14272 இலங்கைத் தமிழ் அரசியல்: இனமோதலும் மிதவாதமும்.

கந்தையா சர்வேஸ்வரன். யாழ்ப்பாணம்: தொழில்துறை மற்றும் பட்டப் படிப்பகம், School of Professional and Degree Studies, கட்டப்பிராய், கோப்பாய் தெற்கு, கோப்பாய், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B,

13026 இலங்கையில் ஊடகவியல்.

தம்பிஐயா தேவதாஸ். கொழும்பு 13: வித்தியாதீபம் பதிப்பகம், 90/9, புதுச் செட்டித் தெரு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 13: சன் பிரின்டெக்).x, 100 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 18.5×13 சமீ.,

14842 சமூகவெளி: தரிசனங்களும் பதிவுகளும்.

மு.அநாதரட்சகன் (இயற்பெயர்: முருகேசு இராஜநாயகம்). யாழ்ப்பாணம்: ஜீவநதி, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுலை 2015. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xviii, 90 பக்கம், விலை: ரூபா 250.,