14632 பட்டது.

முகில்நிலா (ஆசிரியர்), ஜெரா (புகைப்படங்கள்). தமிழ்நாடு: திணை வெளியீட்டகம், மீனாட்சிபுரம், நாகர்கோவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (ஆனைக்கோட்டை: றூபன் பிரின்டர்ஸ்). vi, 57 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 10×15.5 சமீ. தன் இன விடுதலைக்காகப் பல இன்னுயிர்களை இழந்த ஈழ மண்ணின் தவிப்பே “பட்டது” என்ற கவிதைத் தொகுப்பாகியுள்ளது. ஓர் அழுகுரல், ஒரு தவிப்பு, ஓர் ஏக்கம் என மனிதத் துயரத்தின் மொத்தமும் கலந்த ஒளிப்படக் கலவைகொண்ட கவிதைகள் இவை. கவிதைகள் முழுவதும் இழப்பின் வலிகளை நமக்கு உணர்த்துகின்றன. முகில்நிலாவின் கவிதை வரிகளுக்கு ஜெராவின் புகைப்படங்கள் அழுத்தம் தருகின்றன. “வலி, வேதனை, விரக்தி, அவமானம், ஆர்ப்பரிப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கட்டிய கூடாய் நாம். கண்மூடி இருக்கும் என் சமூகத்தின் நினைவிற்கு மட்டுமல்ல இன்றும் நாளையும் இனிவரும் நாட்களிலும் கடத்தப்பட வேண்டிய கட்டாயமாக-பட்டது. இந்தப் பட்டதுக்காக நாம் பட்டிருக்கின்ற வலி முதல் குழந்தைப் பிரசவிப்பில் ஒரு அன்னை படுகின்ற வலிக்கும் அதிகமானது” (முகில்நிலா, வன்னி).

ஏனைய பதிவுகள்

14528 கல்லூரி நாடகங்கள்: ஆறு நாடகங்களின் தொகுதி.

பா.இரகுவரன். பருத்தித்துறை: பா.இரகுவரன், பிராமின் வீதி, தும்பளை, 1வது பதிப்பு, ஜுலை 2007. (பருத்தித்துறை: நியு S.P.M. ஓப்செட் பிரின்டர்ஸ், வீ.எம்.வீதி). xiii, (4), 92 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 20.5×14

14866 தரிசனப் பார்வைகள்.

த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, புரட்டாதி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 64 பக்கம், விலை: ரூபா 200.,

14731 வானம்பாடியும் ரோஜாவும்.

கெக்கிறாவ ஸுலைஹா. கெகிறாவ: கெக்கிறாவ ஸுலைஹா, 32/21, செக்குபிட்டிய தெற்கு, செக்குபிட்டிய, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xi, (3), 78 பக்கம், விலை: ரூபா 220., அளவு:

14111 இரண்டாவது உலக இந்து மாநாடு: யாழ்.பிராந்திய சிறப்பு மலர்-2003.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). x, 74 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை:

12679 – பொது முதலீடு 1992-1996.

கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு. கொழும்பு: தேசிய திட்டமிடல் திணைக்களம், கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி). (4), 250