14637 பிரமிள்: தேர்ந்தெடுத்த கவிதைகள்.

பிரமிள் (மூலம்), சுகுமாரன் (தொகுப்பாசிரியர்). நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 2வது பதிப்பு, டிசம்பர் 2017, 1வது பதிப்பு, மே 2016. (சென்னை 600077: மணி ஓப்செட்). 127 பக்கம், விலை: இந்திய ரூபா 140.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-5244- 049-8. “தீயின் தெளிவு” என்ற தலைப்பில் தொகுப்பாசிரியரின் முன்னுரையுடன் கூடிய இந்நூலில் பிரமீள் படைத்த கவிதைகளில் தேர்ந்த படைப்புகளான, நான், மறைவு, நிழல்கள், பேச்சு, விசாரம், கதவு, சாவு, கோவில், எல்லை, தேடுதல், வினா-விடிவு, பார்வை, சொல், பிரமிட், பிரதி, பழைமை, அடிமனம், தவம், உன் பெயர், கோத்ரம், அறைகூவல், நாளை புரட்சி, பாலை, அற்புதம், தாசி, ஊமை, ராமன் இழந்த சூர்ப்பநகை, குறுங்காவியம்: கண்ணாடியுள்ளிருந்து, காவியம், அருவுருவம், பிறவாத கவிதை, மூன்று இந்தியக் குழந்தைகள், குமிழிகள், பசி, நிகழ மறுத்த அற்புதம், பசுந்தரை, முதல் முகத்தின் தங்கைக்கு, என் பெயர், கன்னி, மோஹினி, வண்ணத்துப் பூச்சியும் கடலும், மண்டபம், பியானோ, கடல் நடுவே ஒரு களம், 24 மணிநேர இரவு, உதிர நதி, இரும்பின் இசை, கீற்று, கிரணம், இடம் ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இறுதிப் பிரிவில் “பிரமிள் கவிதைகள்: ஓர் உரையாடல்: கடலாய் விரியும் நீர்மொக்குகள்” -எம்.யுவன், சுகுமாரன் ஆகியோரின் உரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

14550 திருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதலாண்டு மலர்-ஆனி 1961.

மஹாகவி, பாலேஸ்வரி, ஈழவாணன் (தொகுப்பாசிரியர்கள்). திருக்கோணமலை: திருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, ஆனி 1961. (அச்சக விபரம் தரப்படவில்லை). (9), 10-96 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21.5×14 சமீ.

12420 – தாரகை – இதழ்18:2014.

க.வினோஷியா, ரா.சுகிர்தா (இதழாசிரியர்கள்). கொழும்பு: வுல்வெண்டால் பெண்கள் உயர்தரப் பாடசாலை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 11: அஷ்டலட்சுமி பதிப்பகம், 320, செட்டியார் தெரு). 226 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25X18.5

14974 சோனகத் தேசம்: மிகச் சுருக்கமான அறிமுகம்.

A.B.M .இத்ரீஸ். வாழைச்சேனை 05: சோனகம் வெளியீடு, மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 208 பக்கம், விலை: ரூபா 400., அளவு:

14358 சிந்தனை: மலர் 2 இதழ் 2/3 (ஜுலை-ஒக்டோபர 1968).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1968. (கண்டி: நேஷனல் பிரின்டர்ஸ், 241, கொழும்பு வீதி). 58 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு:

12026 – இந்து நாகரிகம்: பாகம் 3.

க.சொக்கலிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1997. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, B.A.தம்பி லேன்). xi, 216 பக்கம், விலை: ரூபா 140.00,