14649 மிகுதியை எங்கு வாசிக்கலாம்.

றியாஸ் குரானா. வாழைச்சேனை 05: காகம் (உயிர்ப்பைத் தேடும் வேர்கள்) வெளியீடு, மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, ஜுன் 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 128 பக்கம், விலை: ரூபா 400.00, அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-4644-12-0. றியாஸ் குரானா இலங்கையில் அக்கரைப்பற்றை சேர்ந்தவர். 2005 முதல் 2007 வரை “பெருவெளி” என்ற சிற்றிதழை நடத்திவந்தார். “ஆதி நதியிலிருந்து கிழக்குப் பக்கம் பிரிகிறது ஒரு கிளை”, “வண்ணத்துப்பூச்சியாகி பறந்த கதைக்குரிய காலம்”, “நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு”, “செய்வினை” போன்ற தலைப்புகளில் அரசியல் இலக்கியப் பிரதிகளையும் கவிதைத் தொகுப்புகளையும் இவர் வெளியிட்டுள்ளார். பின்நவீனம் குறித்த எழுச்சியை அதற்குள்ளிருக்கும் மாற்றுத் தளங்களை எழுத்துச் சூழலில் அறிமுகப்படுத்தப் பல்வேறு உரையாடல்களையும் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். சொற்கள் குறித்த பெரும் ஆய்வுகளைத் தன் கவிதைகள் தோறும் நிகழ்த்திக் காட்டியபடி இருக்கிறார். அது இயல்பாய் நடந்ததா அல்லது அதுதான் அவரின் இயங்கு தளமா என்பதை அவரது கவிதைகளை நீந்திக் கடந்தால் மட்டுமே நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். (பூங்குழலி வீரன், வல்லினம்).

ஏனைய பதிவுகள்

12158 – நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை.

நக்கீரதேவ நாயனார் (மூலம்), ஸ்ரீமதி சிவானந்தம் தம்பையா (தொகுப்பாசிரியர்),மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை (பதிப்பாசிரியர்). கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175,செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1955. (சென்னை 7: தி பிரிமியர் ஆர்ட் பிரஸ், புரசவாக்கம்). xx,

14503 விரலிசை: ஹார்மோனியம் கற்றலுக்கான வழிகாட்டி நூல்.

தவநாதன் றொபேட். யாழ்ப்பாணம்: தவநாதன் றொபேட், கலைத்திறள் வெளியீடு, தெட்சணாமணி இல்லம், இணுவில், 1வது பதிப்பு, 2008. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). xii, 52 பக்கம், விலை: ரூபா

12160 – நற்சிந்தனைத் திரட்டு.

சிவயோக சுவாமிகள் (மூலம்). கொழும்பு 7: சிவயோக சுவாமிகள் திருவடி நம்பிக்கைப் பொறுப்பு வெளியீடு, 15, வாலுகாராம வீதி, 2வது பதிப்பு, 2000, 1வது பதிப்பு, 1965. (கொழும்பு: கலர் டொட்ஸ் பிரின்டர்ஸ்). 64