14650 முகிலெனக்கு துகிலாகும்: வடிவழகையன் கவிதைகள்.

வடிவழகையன். சுவிட்சர்லாந்து: சுகர்யா வெளியீட்டகம், 1வது பதிப்பு, வைகாசி 2018. (யாழ்ப்பாணம்: நியு பாரதி பிரின்டர்ஸ், அளவெட்டி தெற்கு, அளவெட்டி). xviii, 126 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 28.5×14 சமீ., ISBN: 978-955- 3535-00-9. “இது கவிதைகள் எழுதவெனப் புறப்பட்ட கத்துக்குட்டியொன்றின் கிறுக்கல்கள். உள்ளத்தில் பொங்கிய உணர்வுகளையெல்லாம் ஊற்றிவைத்த கூஜா. சமூகத்திற்காக ஆத்திரம் பொங்கிய பொழுதுகளில் அதை அடக்கமுடியாமல் கொட்டிவைத்த பாத்திரம். தமிழ் ஓலை எடுத்து தனித்திருந்தே பின்னிப்பின்னி தமிழுணர்வால் வேய்ந்து அழகுணர்வோடு கட்டிய கவிதைக் குடில். எழுதத் தொடங்கிய காலத்தில் எழுதியவை கவிதைகள் தானா என்கிற கடும் சந்தேகம் எனக்கிருந்ததென்னவோ நிஜம். ஆனால் எழுதியவைகளில் கவித்துவம் இருப்பது நிஜத்திலும் நிஜம். இந்தப் பயணம் சில பொழுதில் மரபின்மேல் ஏறியும் சில பொழுதில் மரபை மீறியும் நிகழ்ந்திருக்கிறது. இப்பயணத்தினை தொடங்கிய காலங்களில் வாய்ப்பளித்து வளர்த்த இலங்கை வானொலியின் கவிதைக் கலசம், இதய சங்கமம், பத்திரிகைகள், சிற்றிதழ்கள் சில சிரம் தாழ்த்துதற்குரியன. கண்டதையும் எழுதக்கூடாதென்பதில் கண்டிப்போடு இருந்திருக்கிறேன். அதனால் கண்டதையே எழுதியிருக்கிறேன். ஆனால் நீங்கள் காணாதவைகளைக்கூட அவற்றில் நான் கண்டிருக்கிறேன். அதையே விண்டிருக்கிறேன்.” (கவிஞரின் வாக்குமூலம்). இந்நூலில் ஆசிரியரின் “முது தமிழே” என்ற கவிதை முதல் “அள்ளிச் சொரிந்தவற்றுள் கிள்ளமுடிந்தவை” என்ற படைப்பாக்கம் வரை 124 தலைப்புகளில் கவிதைப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

13022 அம்பலவாணர் கலையரங்கம்: முதலாம் ஆண்டு நிறைவு மலர் 2018.

கா.குகபாலன் (தொகுப்பாசிரியர்). புங்குடுதீவு: கலைப்பெரு மன்றம்இ 1வது பதிப்புஇ ஏப்ரல் 2018. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).60 பக்கம்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ அளவு: 24.5×17 சமீ. புங்குடுதீவில், மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு

12008 – நாவலரியல்: ஆறுமுக நாவலரினதும் ஆறுமுக நாவலர் பற்றியதுமான வெளியீடுகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்விபரப் பட்டியல்.

இ.கிருஷ்ணகுமார், ஆ.சிவநேசச்செல்வன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, 1வது பதிப்பு, 1979. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (4), 32 பக்கம், புகைப்படம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 நாவலரியல் நூற்கண்காட்சிக்

14785 பாதி உறவு: குறுநாவல்.

பார்த்திபன். ஜேர்மனி: தென்னாசிய நிறுவனம், Sud Asien Buro Kiefern str. 45, 5600, Wuppertal -2, West Germany, 1வது பதிப்பு, ஜுலை 1987. (கல்லச்சுப் பிரதி). 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

12607 – அடிப்படை உயிரியல்: க.பொ.த.உயர்தரம் உயிரியல் பாடத்திட்டம்.

வீ.ச.சிவகுமாரன். கொழும்பு 6: வேதா சிவகுமாரன், 6/1, டாக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (கொழும்பு: கிரிப்ஸ்). 136 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×15 சமீ.