14723 விடியலின் விழுதுகள்.

ஸக்கிய்யா ஸித்தீக் பரீத். மாவனல்லை: எக்மி பதிப்பகம், 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, 1வது பதிப்பு, ஜுலை 2010. (மாவனல்லை: எம்.ஜே.எம். பிரின்டர்ஸ், 119, பிரதான வீதி). xviii, 122 பக்கம், விலை: ரூபா 175.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-98766- 1-8. இத்தொகுதியில் திருப்பம், மங்காவடு, காலத்தின் கோலம், கண்ணீர் எழுப்பிகள், இறைத் தீர்ப்பு, திசை மாறிய பறவை, நிரபராதிகள், கோக்கி யார்?, மின்னும் தாரகை, இணங்கிப் போ மகளே, இலவு காத்த கிளி, முக்காட்டினுள் மாமி, நியதி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பதின்மூன்று சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. மாவனல்லை தெல்கஹகொடையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு தெகிவளையை வாழ்விடமாகவும் கொண்டவர் ஸக்கிய்யா ஸித்தீக் பரீத். இவர் தனது ஆரம்பக் கல்வியை தெல்கஹகொடை முஸ்லிம் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை உயன்வத்தை நூராணியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் பெற்றுக்கொண்டவர். அப்பாடசாலையில் கையெழுத்துப் பிரதியாக வெளிவந்த “தேனருவி” இதழில் தனது கன்னிப் படைப்புக்களை தவழவிட்டவர். ஆசிரியராகப் பணியாற்றும் வேளையிலேயே பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தவர். தற்போது ஆசிரியர் சேவையிலிருந்து ஒய்வுபெற்றபின் முழுநேர எழுத்துப் பணியிலும் சமூகப்பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஏனைய பதிவுகள்

14844 ஞாபகிக்கத்தக்கதோர் புன்னகை.

கெக்கிறாவ ஸுலைஹா. கெகிறாவ: கெக்கிறாவ ஸுலைஹா, 32/21, செக்குபிட்டிய தெற்கு, செக்குபிட்டிய, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 120 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×15

12221 – அரசறிவியலாளன் (இதழ் 3, டிசம்பர் 2009).

ஜெ.கவிதா. யாழ்ப்பாணம்: அரசறிவியல் ஒன்றியம், அரசறிவியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிறின்டர்ஸ், 15/2டீ, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). x, 118 பக்கம், வண்ணத்

Mostbet Casino Indir Arşivleri

Mostbet Kayıt Deneme Bonusu İçerik Mostbet Kusursuz Bonus Sistemi Mostbet Uygulaması Nasıl Indirilir? ®️ Mostbet Kayıt Ol Mostbetcasino Com Hesabımın Açılmasını İstiyorum Mostbet Türkiye Online

14878 வெற்றிக்கு வலிகள் தேவை: கவிதைகளும் கதைகளும்.

வள்ளியம்மை சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: தேசிய கலை இலக்கியப் பேரவை, 62, காங்கேசன்துறை வீதி, கொக்குவில் சந்தி, கொக்குவில், 1வது பதிப்பு, நவம்பர் 2019. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). xii, 119

14386 க.பொ.த.உயர தரம் வணிகக் கல்வி-2.

அ.சிவநேசராஜா, என்.கே.பாலச்சந்திர சர்மா. கொழும்பு 13: என்.கே.பாலச்சந்திர சர்மா, 160,கொட்டாஞ்சேனை வீதி, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 15: விஜயா அச்சகம், 825ஃ5, புளுமண்டல் வீதி). (6), 150 பக்கம், விலை: ரூபா 140.00,