14744 உயிர்வாசம் (நாவல்).

தாமரைச் செல்வி (இயற்பெயர்: ரதிதேவி கந்தசாமி). பரந்தன்: சுப்ரம் பிரசுராலயம், இல. 77 , குமரபுரம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 369, கே.கே. எஸ். வீதி). xviii, 550 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 21.5×13.5 சமீ. தற்போது அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றிருக்கும் தாமரைச்செல்வி, அவுஸ்திரேலியாவில், அரசிடத்திலும் ஊடகங்களிடத்திலும் பிரதான பேசுபொருளாகவிருந்த படகு மக்களைப் (Boat People) பற்றிய புதினத்தை உயிர் வாசம் என்ற பெயரில் எழுதியிருக்கிறார். இலங்கையில் நீடித்தபோரையடுத்து, வாழ்வா சாவா என்று உயிரைக் கையில் பிடித்தவாறு வாழ்ந்த மக்கள், அங்கிருந்து தப்பி எங்காவது சென்றுவிடத்துடித்தமை தொடர்பான வலிநிரம்பிய கதை உயிர்வாசம். எதிர்காலம் குறித்த கனவுகளை சுமந்தவாறு அவுஸ்திரேலியாவுக்கு உயிரைப் பணயம் வைத்து கடல்மார்க்கமாக படகுகளில் வந்தவர்கள் நடுக்கடலில் எதிர்கொண்ட உயிர்ப் போராட்டத்தையும், கரை ஒதுங்கிய பின்னரும் சுமந்த வலிகள் பற்றியும், புகலிடத்தின் வாழ்வுக்கோலத்தையும் உயிர்வாசம் நாவல் சுமார் 540 பக்கத்தில் சொல்கிறது. இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தனில் பிறந்திருக்கும் தாமரைச்செல்வி, 1973 ஆம் ஆண்டு முதல் சிறுகதைகள், நாவல்கள் எழுதிவருகிறார். இதுவரையில் 200 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளும் மூன்று குறுநாவல்களும், ஆறு நாவல்களும் எழுதியுள்ளார். இவரது சில சிறுகதைகள் குறும்படங்களாகவும் வெளியாகியுள்ளன. தமிழக பிரபல திரைப்பட இயக்குநர் “முள்ளும் மலரும்” மகேந்திரனும் போர்க்காலத்தில் வன்னியில் நின்ற சமயத்தில், தாமரைச்செல்வியின் சில கதைகளை குறுந்திரைப்படமாக்கியுள்ளார். தாமரைச்செல்வி, எழுதத் தொடங்கிய காலம் முதல், வடபுலத்தில் குறிப்பாக வன்னிப் பிரதேச வயலும் வயல் சார்ந்த மாந்தர்கள் குறித்த புனைவுகளை எழுதிவந்திருப்பவர்.

ஏனைய பதிவுகள்

14037 பகவத் கீதை வெண்பா: மூன்றாம் பாகம்: ஞான யோகம் (அத்தியாயம் 13-18) விளக்கக் குறிப்புடன்.

ஏ.பெரியதம்பிப்பிள்ளை. சுன்னாகம்: தனலக்குமி புத்தகசாலை, 1வது பதிப்பு, நவம்பர் 1976. (சுன்னாகம்: முத்தையா சபாரத்தினம், திருமகள் அழுத்தகம்). xxxii, 132 பக்கம், விலை: ரூபா 7.00, அளவு: 21×14 சமீ. மட்டக்களப்பு புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை

12888 – எம்மவர்கள்: மறக்கப்படமுடியாத ஆளுமைகள்.

த.கலாமணி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்கழி 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5 x 14.5

12707 – சோஃபகிளிஸின் மன்னன் ஈடிப்பஸ்.

சோஃபகிளீஸ் (கிரேக்க மூலம்), குழந்தைம.சண்முகலிங்கம் (தமிழாக்கம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39,

12691 – சங்கீதம்: வினா-விடை தரம் 2 & 3.

குமுதினி கனகரெத்தினம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, E.L1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 2வது பதிப்பு, 1997, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 14: கோல் குவிக் பிரின்டர்ஸ்). (4), 111 பக்கம், விலை:

12981 – அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்.

எஸ்.ஜெயானந்தமூர்த்தி. வாழைச்சேனை: அபிஷா வெளியீட்டகம், இரத்தினம் வீதி, 1வது பதிப்பு, தை 2008. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம்). ix, 174 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 400., அளவு: 20 x

12924 – ஆசிரியமணி:அ.பஞ்சாட்சரம் அவர்களின் பாராட்டுவிழா மலர்.

மலர்க் குழு. உரும்பிராய்: ஆசிரியமணி அ.பஞ்சாட்சரம் அவர்கள் பாராட்டுவிழாச் சபை, சைவத் தமிழ் வித்தியாலயம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (44), 46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24