14799 மறுபடியும் நாங்கள்.

இந்துமகேஷ் (இயற்பெயர்: சின்னையா மகேஸ்வரன்). ஜேர்மனி: சி.மகேஸ்வரன், Volta Str. 51, 2800 Bremen-33, West Germany, 1வது பதிப்பு, ஜனவரி 1987. (கல்லச்சுப் பிரதியாக்கம்). 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ. ஐரோப்பிய மண்ணில் தமிழ் வானொலிகளோ, தொலைக்காட்சிகளோ இல்லாத கால கட்டத்தில் ஜேர்மனியின், பிறேமனில் இரு மாதத்துக்கு ஒரு சஞ்சிகையாக பூவரசு சஞ்சிகை 1991 இல் முகிழ்ந்தது. இதன் ஸ்தாபக ஆசிரியராக இந்து மகேஷ் விளங்கினார். புலம்பெயர் மண்ணில் பல எழுத்தாளர்களை உருவாக்கி, வளர்த்து விட்ட பெருமை, பல் வேறுபட்ட நாடுகளிலும் வாசகர்களைக் கொண்டிருந்த “பூவரசு” சஞ்சிகைக்கும் அதன் ஆசிரியர் இந்துமகேசுக்கும் உண்டு. சஞ்சிகையின் மேலதிக செயற்பாடுகளாக ஒவ்வோர் ஆண்டும் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடாத்தப்பட்டு ஆண்டு நிறைவை ஒட்டிய விழா கொண்டப்பட்டு அந்த விழாவில் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டு வந்தன. 2006க்குப் பிற்பட்ட காலங்களில் இணைய வளர்ச்சியின் மேலோங்கலில் பூவரசின் வருகையில் தள்ளாட்டம் ஏற்பட்டது. ஆண்டுக்கு இரு இதழ்களே வெளிவருவதுகூடச் சில காலங்களின்பின்னர் சாத்தியமாகவில்லை. பூவரசின் பின்னணியில் அக்காலகட்டத்தில் நாவல்கள் சிலவும் கையெழுத்துப் (கல்லச்சுப்) பிரதிகளாக வெளிவந்திருந்தன. ‘மறுபடியும் நாங்கள்” அவற்றில் ஒன்றாகும். ஜேர்மன் கலாச்சாரப் பின்னணியையும் எமது தமிழ் கலாச்சாரப் பின்னணியையும் இவரது நாவல் கோடிட்டுக்காட்டுகின்றது. மௌனத்தில் அழுகின்ற மனங்கள், விடியலுக்கில்லை தூரம், நீலவிழிப் பாவைகள் ஆகிய நாவல்களையும் இவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 071191).

ஏனைய பதிவுகள்

14047 அனைவரும் திருமணப் பொருத்தம் அறிந்திட.

என்.ராஜமணி. கொழும்பு 11: அஷ்டலஷ்மி பதிப்பகம், 320, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 11: அஷ்டல~;மி பதிப்பகம், 320, செட்டியார் தெரு). vii, 72 பக்கம், விலை: ரூபா

12973 – பெண் விடுதலையும் விடுதலைப் புலிகளும்: தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் எழுத்தும் பேச்சும்.

அன்ரன் பாலசிங்கம் (மூலம்), அறிவன் தமிழ் (தொகுப்பாசிரியர்). சென்னை 600107: தமிழர் தாயகம் வெளியீடு, எண் 1/70 C, பூந்தமல்லி நெடுஞ்சாலை, 1வது பதிப்பு, மே 2015. (சென்னை: பாண்டியன் மறுதோன்றி அச்சகம்). (12),

Content Bet Зеркало Официальный Сайт 1хбет Приветственный Пакет До 128 000 Рублей Всего Доступно Порядка 55 Вариантов Среди Них Популярные: Приложение 1xbet Для Ios И Андроид

14224 நல்லைக் கந்தன்.

செ.இரத்தினசபாபதி. கொழும்பு 6: செ.இரத்தினசபாபதி, 54, 1/3, இராஜசிங்க வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: சரவணா அச்சகம்). 54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. இலங்கை ரயில்வே

14975 தமிழர் யார்?

ந. சி. கந்தையாபிள்ளை. சென்னை: முத்தமிழ் நிலையம், எம். சக்கரவர்த்தி நயினார், Cottage Industries Publishing House, 2வது பதிப்பு, பெப்ரவரி 1947, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1946. (மதராஸ்: T.V.C. Press 329