நிஹால் பீ.ஜயதுங்க (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (11), 12-528 பக்கம், விலை: ரூபா 1350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955- 30-9651-7. இலங்கையின் முப்பது வருடகால யுத்தத்தைப் பின்னணியாகக்கொண்ட நாவல். இருபக்க நியாயங்களையும் அநியாயங்களையும் இந்நூல் பேசுகின்றது. கேர்ணல் சிரிதாசவும் பேராசிரியை தேவகியும் கதையின் பிரதான பாத்திரங்களாவர். இந்நாவலில் கள நிலவரங்கள் யதார்த்தமாகவும், வரலாற்றுக் கண்ணோட்டத்துடனும் முன்வைக்கப்பட்டுள்ளன. குறுகிய இனவாதங்களுக்கப்பால் பாரபட்சமற்ற வகையில் தமிழ்- சிங்கள மக்கள் மனித நேயத்துடன் இணைந்து வாழ்வதை இந்நாவல் வேண்டிநிற்கின்றது. இலங்கையில் பெரும்பாலான சிங்கள எழுத்தாளர்கள் இனவாதத்தை முதன்மைப்படுத்திய நாட்டுப்பற்றாளர்களாகத் தமது படைப்புக்களை எழுதுகின்றனர். அதனூடாக தமது இனம் உயர்வானதென்றும் ஏனையோர் முக்கியமற்றவர்கள் என்றும் தெரிவிக்கின்றனர். குருதிப் பூஜை சிங்களவர்களைப் போலவே தமிழர்களும் மனிதர்களே என்பதை தத்ரூபமாக வெளிக்காட்டுகின்றது. சிங்கள மூல நூல் பாடசாலைகளின் நூலகங்களுக்குப் பொருத்தமானதென கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65498).
14589 எனது மகள் கேள்வி கேட்பவள்.
கற்பகம் யசோதர (இயற்பெயர்: பிரதீபா கனகாதில்லைநாதன்). சென்னை 600005: வடலி வெளியீடு, பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை). 102 பக்கம், விலை: