முருகுப்பிள்ளை சிவநேசன். பருத்தித்துறை: டொக்டர் நீரஜா ஞாபகார்த்த வெளியீடு, வியாபாரி மூலை, 1வது பதிப்பு, மார்ச் 2018. (பருத்தித்துறை: S.P.M. பதிப்பகம்). (4), viii, 150 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ. அவ்வப்போது முகநூலில் பதிவிடப்பட்ட ஆசிரியரின் இராமாயணம் தொடர்பான ஆக்கங்களின் தேர்ந்த தொகுப்பு இது. கவிதை ஒழுங்கில் கருத்துக்களைப் பகிரும்போது, விலாவாரியாக எழுத முற்படாமல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் மேலோட்டமாகத் தந்திருக்கிறார். பல இடங்களில் கம்பர் தந்த கருத்துக்களை காலத்திற்கு ஏற்ப அடக்கி வாசிக்கவேண்டிய தேவையும் ஆசிரியருக்கு இருந்துள்ளதாக அவரே முகவுரையில் குறிப்பிடுகிறார். முருகுப்பிள்ளை சிவநேசன், பருத்தித்துறைப் பிரதேசத்தின் வியாபாரி மூலையைச் சேர்ந்தவர். யா/ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவர். 1978இல் மக்கள் வங்கியில் இணைந்து 34 வருடங்கள் வங்கிச்சேவையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1991 முதல் இலக்கியப் படைப்புகளை ஊடகங்களுக்கு வழங்கி வருபவர்.