14866 தரிசனப் பார்வைகள்.

த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, புரட்டாதி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 64 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-85-5. இந்நூலில் கவித்துவச் சொல்லாடலும் புனைவும்: இ.சு.முரளிதரனின் “கடவுளின் கைபேசி எண்” சிறுகதைத் தொகுதியை முன்னிறுத்தி, மனசின் பிடிக்குள் சிக்கிய தரிசனத் தேன்துளிகள், தன் வரலாறு கூறும் சிறுகதைகள்: “காவியமாய் நெஞ்சின் ஓவியமாய்” சிறுகதைத் தொகுதி பற்றிய வாசகர் நிலை மனப்பதிவுகள், கவிஞர் மு.செல்லையாவும் வளர்பிறையும், சூழலியல் தத்துவம் உணர்த்தும் நாவல்: செங்கை ஆழியானின் “ஓ அந்த அழகிய பழைய உலகம்” நாவல் குறித்த சில மனப்பதிவுகள், நறுக்காக சில வார்த்தைகள்: மொழிவரதனின் “நறுக்” கவிதைத் தொகுதியை முன்வைத்து, மன ஆதங்கங்களுக்கு வடிகால் தேடும் மானசீகப் படைப்பாளி: நெலோமி, அந்தனி ஜீவாவின் “தலைநகரில் தமிழ் நாடக அரங்கு”, ஜப்பானிய ஹைக்கூ இலக்கண மரபை மீறாத ஹைக்கூத் தொகுதி: “இயற்கை இயல்பு” பற்றிய ஒரு பார்வை, வலி சுமந்த கூத்துக் கலைஞரின் அனுபவ தரிசனங்கள், “முடிவல்ல ஆரம்பம்” இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதனின் நாவல் பற்றிய சில குறிப்புகள் ஆகிய பதினொரு திறனாய்வுக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஜீவநதி வெளியீட்டகத்தின் 110ஆவது பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65186).

ஏனைய பதிவுகள்

12992 – இலங்கைத் தொல்பொருளியலளவை ஞாபகவேடு: தொகுதி 5: இலங்கைத் தூபி.

செ.பரணவிதான (ஆங்கில மூலம்), ஞானகலாம்பிகை இரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1964. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). xii, 99 பக்கம், விளக்கப்படங்கள்,

12880 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: இதழ் 10/11 (1994/1995).

செல்விநளினி திருநாவுக்கரசு (இதழ் ஆசிரியர்), A.அந்தனிராஜன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403 1/1, காலி வீதி). xv,

12706 – சிகரம்.

பிரியா சதீஸ்குமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: நாடக மன்றம்,சைவ மங்கையர் வித்தியாலயம், இல.23, உருத்திரா மாவத்தை, வெள்ளவத்தை,1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). viii, 112

14108 அனுமந்த மகரந்தம் ரம்பொடை வெவண்டன்; மலையுறை அருள் மிகு ஸ்ரீ பக்த அனுமன் ஆலய மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் ;.

மலர்க்குழு. கொழும்பு 4: இலங்கை சின்மய மிஷன், 21/1, டி கிரெட்சர் பிளேஸ், இணை வெளியீடு, ரம்பொடை: ஸ்ரீ பக்த அனுமன் ஆலயம், வெவண்டன் மலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2001. (கொழும்பு 13:

14228 மகான்கள் அர்ச ;சனை மாலை.

க.இராமச்சந்திரன். கொழும்பு 4: அ.சீவரட்ணம், ஆனந்தசாகர, 42, சிறபறி காடின்ஸ், 2வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 1972. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை). 102 பக்கம்,