14867 நீட்சி பெறும் சொற்கள்: கட்டுரைகள்.

லறீனா அப்துல் ஹக். சென்னை 600005: மணற்கேணி பதிப்பகம், முதல் தளம், புதிய எண் 10, பழைய எண் 288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (தஞ்சாவூர்: அகரம் அச்சகம்). 110 பக்கம், விலை: இந்திய ரூபா 80.00, அளவு: 21×14 சமீ. இந்நூலில் குமாரி ஜயவர்தனவின் ஆய்வுலகம்: சில அறிமுகக் குறிப்புகள், அழகுத் தமிழில் அரபுக் கதைகள், ஊடறு.கொம்: விழுமிய வாழ்தலை நோக்கி, மொழியின் விடியலை முழங்கும் குரல்கள், ஊருக்கு நாலு ஆளுமைப் பெண்கள், மழைமரத் தவத்தில் திளைத்தபடி, ஈழத்துக் கவிதை இதழ்கள் வரிசையில் “கவிஞன்” இதழ்: சில குறிப்புகள், யாதுமாகி நிற்கும் ஓர் இளைய பாரதி, இலங்கையின் இக்பால், புலவர் அப்துல் காதர் லெப்பை (1913-1984), நீட்சி பெறும் சொற்கள் ஆகிய பத்து இலக்கியக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65145).

ஏனைய பதிவுகள்

12847 – புனைவுகள், நினைவுகள், நிஜங்கள்: ஒரு ஆய்வுநிலைத் தொகுப்பு.

செல்வி திருச்சந்திரன். கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58 தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xii, 134 பக்கம்,

14085 சைவ போதினி மத்திய பிரிவு (எட்டாம் வகுப்புக்குரியது).

நூலாக்கக்குழு. கொழும்பு13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 3வது பதிப்பு, மார்ச் 1964. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு). (4), 186 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: ரூபா 2.00,

14688 கடைசி வேரின் ஈரம்: சிறுகதைகள்.

எம்.எம்.அலி அக்பர். கிண்ணியா: பேனா வெளியீடு, பழைய இலங்கை வங்கி வீதி, கிண்ணியா-4, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). xvi, 112 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு:

14221 நடராஜப்பத்து.

ந.மா.கேதாரப்பிள்ளை (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: ந.மா. கேதாரப்பிள்ளைஇ முதலைக்குடாஇ கொக்கட்டிச்சோலைஇ பதிப்பு ஆண்டு விபரம் தரப்படவில்லை. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் அச்சகம்). (6) பக்கம்இ விலை: ரூபா 15.00இ அளவு: 21×15 சமீ. செய்யுள்வடிவில் அமைந்துள்ள பக்தி

12529 – குருக்கேத்திரன் போர்:வடமோடிக் கூத்து.

வடிவேல் இன்பமோகன் (பதிப்பாசிரியர்). வந்தாறுமூலை: கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxxv, (8), 109 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600.,