14868 பதிவுகளின் சங்கமம்.

எஸ்.எல்.மன்சூர். அட்டாளைச்சேனை-01: எஸ்.எல்.மன்சூர், அனாசமி பதிப்பகம், டீன்ஸ் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2014. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட் பிரின்டர்ஸ்). 132 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-4975-01-9. அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூரினால் திறனாய்வு செய்யப்பட்ட நூல்கள், சஞ்சிகைகளின் விமர்சனத் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. சமயம், அரசியல், கல்வியியல், இலக்கியம்-வரலாறு, சிறுகதைகள், காவியம்-குறும்பா-கவிதைகள் ஆகிய துறைகளில் எழுதப்பட்ட நூல்கள் இவரது திறனாய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. இதில் 30 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றும் நூலாசிரியர் எஸ்.எல்.மன்சூர் சிறந்த விமர்சகராகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்டவர். மொழியின் செழுமை என்ற தன் முதலாவது நூலை முன்னதாக வெளியிட்டவர். இது இவரது இரண்டாவது நூல். இந்நூல் பற்றிய தனது உரையில், நூல்களில் சரி-பிழை காண்பது தனது நோக்கமல்ல என்றும், இலக்கிய வடிவத்தினுள் கொண்டுவரப்பட்ட நூல்களின் எண்ணக்கருவைத் தான் அறிந்து, தனது தேடல்களினூடாக நூலுக்கு வழங்குகின்ற அறிமுகக் குறிப்புகள் எழுத்தாளர்களை ஊக்கவிக்கவேண்டும் என்பதே தனது குறிக்கோளாகும் என்று குறிப்பிட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 65124).

ஏனைய பதிவுகள்

12056 – சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்.

சி.பத்மநாதன், க.இரகுபரன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xxii,

12697 – அருங்கலை ஆடற்கலை.

சுபாஷிணி பத்மநாதன். தெகிவளை: விமலோதயகிளாசிக்கல் பரத நாட்டிய சென்டர், இல. 19, கிரகரி பிளேஸ், 1வது பதிப்பு, ஜனவரி 1998. (கொழும்பு 6: பிரின்ட் கிராப்பிக்ஸ், 4, நெல்சன் பிளேஸ்,வெள்ளவத்தை). (6), 82 பக்கம்,

12064 – ஒரு சைவ வாசகம்: தமிழ் மொழிபெயர்ப்புடனானது.

சி.பொன்னம்பலம். காரைநகர்: கூத்தப்பிரான் பதிப்பகம், 1வது பதிப்பு, மே 2008. (காரைநகர்: கூத்தப்பிரான் பதிப்பகம்). 128 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-1472-13-9. புலம்பெயர்ந்த சைவத் தமிழ்ச்

12762 – நானிலம்: கலாசார விழா சிறப்பு மலர் 1997.

மலர் வெளியீட்டுக் குழு. செங்கலடி: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், ஏறாவூர்ப்பற்று, 1வது பதிப்பு, 1997. (மருதமுனை: இளம்பிறை ஓப்செற்). 81 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25 x 18.5 சமீ. ஏறாவூர்பற்று

14191 குஞ்சிதபாதம்: இந்து சமயச் சிந்தனைக் கட்டுரைகள்.

சோ.குஹானந்த சர்மா. கொழும்பு 13: சோ. குஹானந்த சர்மா, 136/28, ஜோர்ஜ் ஆர் த. சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 1999. (கொழும்பு: க.தியாகராசா, உரிமையாளர், ஓட்டோ அச்சகம்). 37 பக்கம், விலை:

14494 கவின்கலைகளில் சித்திரக்கலை: க.பொ.த.(சாதாரண)தரம் 7-11.

ஞா.ஞானதயாளன். கொழும்பு 6: தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், 135, கனல்பாங்க் வீதி, 1வது பதிப்பு, ஆவணி 2003. (சென்னை 600001: மாணவர் மறுதோன்றி மையம்). viiiஇ 182 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: