14885 கேரள டயரீஸ்-1: வேர் தேடுவோம்.

அருளினியன். சென்னை: Stoicdale Publishers, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (சென்னை 600042: ஜீவா பதிப்பகம், வேளாச்சேரி). 162 பக்கம், விலை: ரூபா 450., இந்திய ரூபா 230., அளவு: 22×14.5 சமீ. யாழ்ப்பாணம், குப்பிழானைப் பிறப்பிடமாகக் கொண்ட அருளினியன் தன் ஆரம்பக் கல்வியை யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும், உயர் கல்வியை பெங்களூர் பல்கலைக் கழகத்திலும் பெற்றவர். “ஆனந்த விகடன்” மாணவப் பத்திரிகையாளராக முதலில் அறிமுகமான இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் “சினிமா எக்ஸ்பிரஸ்”, “தினமணி” ஆகியவற்றின் உதவி ஆசிரியராகவும், நிருபராகவும் பணியாற்றியவர். தற்போது சுயாதீன பத்திரிகையாளராகவும், பயணத்துறை ஊடகவியலாளராகவும், தமிழ் சினிமாவில் திரைக்கதைகளிலும் பங்களித்திருக்கிறார். கேரளத்தின் அறியாத பக்கங்களோடு அழைத்து செல்கிறார் அருளினியன். பயணக்கட்டுரைகளின் புதிய வரைவிலக்கணம் இந்த கேரள டயரீஸ். இந்நூலில் இவர் எழுதிய தளிப்பறம்பு நம்பூதிரியும் பின்னெ ஞானும், மணிப்பிரவாளமும் இலங்கைத் தமிழும், ஈழவர் என்ற ஈழத்தவர், முருகனைத் தொலைத்த கதை, காவுகள் என்ற கோயில்காடுகள், வேர் தேடி, வெள்ளாளர்கள் யாழ்ப்பாணத்தின் துயரம், நாவலரும் சைவ வெள்ளாள மேலாதிக்கமும், வீரத்தை இழந்த கதை, தேசவழமை என்ற வெள்ளாளச் சட்டம், பணியாக்களும் குறிச்சியர்களும், கொட்டியூர் மர்மங்கள், கண்ணகித் தெய்வமும் கண்டிப் பெரஹராவும், களரி, கதகளியும் மத ஒருமைப்பாடும், பாலாறும் பாவலி ஆறும், முத்தப்பனும் தெய்யமும் கள்ளும் கருவாடும், தட்சனின் தாடி, மாட்டிறைச்சி அரசியல், மிருகபலி ஆரியர், திலீப் ஏட்டனும் டிங்கொயிஸ்டுகளும், Buddy Love ஆகிய 22 பலவினக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14659 விரல்சூப்பி.

ப.கனகேஸ்வரன் (புனைபெயர்: கே.ஜி). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, மார்ச் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xii, 85 பக்கம், விலை: ரூபா 150.,

14147 நல்லைக்குமரன் மலர் 2002.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). x, 104+ (22) பக்கம், புகைப்படங்கள்,

14543 இலக்கியத் தொகுப்பு: க.பொத.(உ.த.) தமிழ் 1.

தேசிய கல்வி நிறுவகத் தமிழ் மொழித்துறை. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 1997. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 242 பக்கம், விலை: ரூபா 65.00,

12576 – விளங்கி வாசித்தலும் ; எழுதுதலும் – II : மேலதிக மொழி விருத்திப் பாடநெறி – தமிழ்.

.M.M.M. முஹ்ஸின், யு.பு.குணரட்ண. கொழும்பு: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: P and A யு பிரின்டர்ஸ் லிமிட்டெட்). 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19

14474 பரராசசேகர நயனவிதி (மூலமும் உரையும்).

சே.சிவசண்முகராஜா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சே.சிவசண்முகராஜா, சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவ அலகு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, வைகாசி 2012. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செற் பிறின்ரேர்ஸ், பலாலி வீதி). vi, 14 பக்கம், விலை:

14080 வைரவர் வழிபாடு.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஜுன் 2014. (யாழ்ப்பாணம்: ரூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை). 88 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 125.00, அளவு: 18.5×12.5 சமீ.