14907 நாவலர் மாநாடு விழாக் காட்சிகள் 1969.

நாவலர் மாநாட்டுக் குழு. கொழும்பு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, 1வது பதிப்பு, நவம்பர் 1969. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு). 94 தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 16.5×19 சமீ. ஆறுமுக நாவலர் திருவுருவச் சிலை யாழ்ப்பாண மாநகரசபை முன்றலில் இருந்து இரத ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அவர் பிறந்த பதியில்-நல்லூரில் நிறுவப்பட்டது. அவ்வேளை நாவலர் மாநாடு-பெருவிழா என்பனவும் 1969 ஜுன் 29, 30, ஜுலை 1, 2 ஆகிய நாட்களில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் நாவலர் மாநாட்டுக் குழுவினரால் நாடளாவிய ரீதியில் கலை நிகழ்ச்சிகளுடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. மதுரை மகா சந்நிதானம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்தனர். நாவலர் தொடர்பான பல காட்சிகளைத் தாங்கிய ஊர்திகளின் பவனியும் இடம்பெற்றிருந்தது. அவ்வேளையின் நிகழ்வுகளை புகைப்படங்களாக, குறிப்புரையுடன் ஆக்கி, ஒரு நிரந்தர வரலாறாக இந்நூல் பதிவுசெய்கின்றது. 100 படங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 26841).

ஏனைய பதிவுகள்

12123 – ஆச்சி நீ காளி.

வே.வரதசுந்தரம். கொழும்பு 6: சிவகாமி அம்மாள் பப்ளிக்கேஷன்ஸ், 25, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (திருக்கோணமலை: உதயன் பதிப்பகம்). viii, 28 பக்கம், புகைப்படத் தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12

12426 – நித்திலம் 2009.

எஸ்.சிவநிர்த்தாநந்தா (பதிப்பாசிரியர்), ச.சிறிதரகுமார் (உதவிப் பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: ஊளுனுஐ பிரிவு, வலயக்கல்வி அலுவலகம், 1வது பதிப்பு, 2009. (திருக்கோணமலை: சண் பிரிண்டர்ஸ், 306 மத்திய வீதி). xvi, 193 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை:

14546 சிறுகதைத் திரட்டு: தரம் 12-13.

நித்தியானந்தன், எம்.பொன்மீரா, க.கருப்பு (தொகுப்பாசிரியர்கள்). தெகிவளை: அகவெளி வெளியீட்டகம், 22-1/3, அப்பன்சோ மாவத்தை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 164 பக்கம், விலை: ரூபா 280.00, அளவு: 21.5/14

14976 விலாசம் தேடும் விழுதுகள் ரோஹிங்யா.

எஸ்.எல்.மன்சூர். கொழும்பு 9: I.B.H. வெளியீட்டகம், 77, தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (கொழும்பு 9: இஸ்லாமிக் புக் ஹவுஸ், 77, தெமட்டகொட வீதி). ix, 86 பக்கம், விலை: ரூபா