14910 திரு அஞ்சலி மலர்.

இலங்கையர் கனகசபை (ஆசிரியர்), த.கிருபாகரன் (இணை ஆசிரியர்). பிரான்ஸ்: சபரீசன் ஒன்றியம், 1வது பதிப்பு, 2001. (பாரிஸ்: மெய்கண்டான் அச்சகம்). 84 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. வட இலங்கை சர்வோதய அறங்காவலரும், தமிழ்கூறும் நல்லுலகினால் நன்கு அறியப்பட்டவரும், வாழ்நாள் முழுவதும் சமூக மேம்பாட்டுக்காக அல்லும் பகலும் உழைத்தவருமான அமரர் தொண்டர் கந்தையா திருநாவுக்கரசு. அவர்களின் மறைவு குறித்து வெளியிடப்பட்ட நினைவஞ்சலி மலர். சமூகத்தின் உயர்வே தனது லட்சியம் என சொல்லாலும் செயலாலும் வாழ்ந்து காட்டி, நிகழ்காலத்தவர் மட்டுமல்லாது எதிர்கால சந்ததியினரும் கடைப்பிடிக்கக்கூடிய வகையில் வாழ்ந்த பெருமகன் தான் தொண்டர் கந்தையா திருநாவுக்கரசு. அன்னாரைப் பற்றிய மனப்பதிவுகளை பாரிஸ் வாழ் பிரமுகர்கள் அஞ்சலிகளாக இந்நூலில் பதிவு செய்திருக்கின்றனர்.

ஏனைய பதிவுகள்

12029 – சிவாகம சைவசித்தாந்த சாத்திரப் படிப்பு: சிவஞானசித்தியார் சுபக்கம்-மூலம்: முதலாம் சூத்திரம்.

ஸ்ரீ வே.கந்தையா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ.வே.கந்தையா, அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, 1வது பதிப்பு, ஆவணி 1953. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை). 24 பக்கம், விலை: சதம் 10., அளவு: 17×11.5 சமீ. சைவஞான நூல்களைக் கற்றலும்

12290 – இலங்கையிற் கல்வி: கி.மு.ஆறாம் நூற்றாண்டு முதல் இற்றை வரை: நூற்றாண்டுவிழா மலர் (பகுதி 1).

நூற்றாண்டு விழா மலர்க் குழு. கொழும்பு: இலங்கை கல்வி கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு: அரசாங்க அச்சகப் பகுதி). lxxxvi 405 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 525., அளவு:

12922 – சர்வாதிகாரி ஹிட்லரை அடிபணிய வைத்த மாவீரன் செண்பகராமன்.

சமரபாகு சீனா உதயகுமார். வல்வெட்டித்துறை: குபேந்திரா பதிப்பகம், கூனன் தோட்டம், சமரபாகு, 1வது பதிப்பு, மார்கழி 2017. (வவுனியா: துஅச்சுப் பதிப்பகம்). viii, 36 பக்கம், விலை: ரூபா 170., அளவு: 18.5 x

12454 – இலங்கையின் வருங்கால ஆசிரியர்கள் (சஞ்சிகை இலக்கம் 2).

யூ.எம்.அபயவர்த்தன (ஆசிரியர்). கொழும்பு 2: கல்வி நூற்றாண்டு விவசாய விசேட வெளியீடு, வேலையனுபவ விவசாயக் கிளை, கல்வி கலாச்சார அமைச்சு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1969. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). 51 பக்கம், விலை:

13A11 – சைவ வினாவிடை: முதற் புத்தகம்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். யாழ்ப்பாணம்: சண்முகநாதன் புத்தகசாலை, 1வது பதிப்பு, 1953. (யாழ்ப்பாணம்: சண்முகநாதன் அச்சகம்). 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 13 x 10.5 சமீ. கேள்வி-பதில்களின் வடிவில் பாமரருக்கும் சைவ