கா.பொ.இரத்தினம். வேலணை: கா.பொ.இரத்தினம், பாராளுமன்ற உறுப்பினர், 1வது பதிப்பு, ஆவணி 1972. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி). 32 பக்கம், விலை: 60 சதம், அளவு: 20.5×13.5 சமீ. இலங்கையின் தேசிய அரசுப் பேரவையில் 05.07.1972இல் நிகழ்த்திய உரை இச்சிறுநூலின் எழுத்துருவில் எழுதப்பட்டு, நூலின் பிரதான இடத்தை வகிக்கிறது. ‘தமிழர்களை அடிமைகளாக்கலாம் என்று குடிக்கவேண்டாம் மனப்பால்” என்ற விரிவான தலைப்பின் கீழ் இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து பிரதம அமைச்சர் சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு 12.05.1972 அன்று எழுதிய கடிதமும் (யார் பைத்தியக்காரர்?), 26.01.1972 அன்று எழுதிய கடிதமும் (மனப்பால் குடிக்கிறீர்களா?) இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34861).