14982 பாஷையூரும் நாட்டுக்கூத்தும்.

மு.சிங்கராயர். பிரான்ஸ்: பாஷையூர் அபிவிருத்திக் குழு, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). (10), 148 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ. ஈழத்தின் நாட்டுக்கூத்துப் பாரம்பரியக் கிராமங்களில் ஒன்றான யாழ்ப்பாணம்-பாஷையூரின் நாட்டுக்கூத்து வரலாற்றினை, கலைஞர்களின் வாழ்வினூடாக திரு. மு.சிங்கராயர் ஆவணப்படுத்தியுள்ளார். பாஷையூர் கூத்தின் தோற்றம், கோவில் திருவிழாவும் கூத்தும், சலித்தெடுத்த முத்துக்கள், பாஷையூர் தந்த பெரும் புலவர்கள், கூத்துக்களை ஆடும் மேடைக் கோலங்கள், அண்ணாவிமார்களும் அரங்குகளும், ஊர்களைக் கவர்ந்திழுக்கும் கூத்து, பங்களிப்பும் பணக்கூத்தும், ஆட்டக்கூத்து, மிருதங்கம் தபேலா வீணை தாளம், ஒலி ஒளி அமைப்புகள், கூத்தும் ஒப்பனையும், பக்கப்பாட்டு, 1920இற்குப் பின் கூத்து, 1945க்குப் பின்னர் பாஷையூர் அரங்கின் கூத்தாளிகள், நாட்டுக்கூத்தில் இளைய தலைமுறை, பாஷையூர் கூத்தின் எதிர்காலச் செல்நெறி, நிறைவுறை ஆகிய 18 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்-பாஷையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓய்வுபெற்ற ஆசிரியர் முடியப்பு சிங்கராயர் எழுத்தாளரும், கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். தனது 20ஆவது வயதில் எழுத்துத் துறையில் நுழைந்த இவர் பன்னூலாசிரியருமாவார்.

ஏனைய பதிவுகள்

12532 – போருக்குப் பின் தென் மோடி நாட்டுக்கூத்து.

பிரான்சிஸ் மிக்கேல்பிள்ளை (புனைபெயர்: தூயமணி). யாழ்ப்பாணம்: இளைஞர் கலைக்கழகம், குருநகர், 1வது பதிப்பு, ஆடி 2006. (யாழ்ப்பாணம்: ஏ.சீ.எம்.அச்சகம்). x, 86 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ. அமரர்

12611 – உயிரியல்(பொதுத் தராதரப் பத்திர வகுப்புக்குரியது).

வீ.இராமகிருஷ்ணன், த. புத்திரசிங்கம். யாழ்ப்பாணம்: வீ.இராமகிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர், யாழ்ப்பாண இந்துக் கல்லூரி, இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: த.புத்திரசிங்கம், ஆசிரியர், வைத்தீஸ்வரா வித்தியாலயம், 3வது பதிப்பு, 1965, 1வது பதிப்பு, 1962, திருத்திய 2வது

12052 – காயத்ரி என்றால் என்ன?

தவயோகி கண்ணையா. நுவரெலியா: ஸ்ரீ காயத்ரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகள் ஸ்ரீலங்காதீஸ்வரர் ஆலயம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14×11.5 சமீ.

12658 – பங்குடமைக் கணக்கீடு- அலகு 9.

கு.கலைச்செல்வன். கொழும்பு 6: மொட் ஸ்டடி சென்டர், 33, பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). iv, 228 பக்கம், அட்டவணைகள்,

12942 – தவத்திரு தனிநாயகம் அடிகளார் (மாட்சி நயப்பு மலர்).

தாபி.சுப்பிரமணியம் (மலர்க் குழுவின் சார்பில்). திருக்கோணமலை: தவத்திரு தனிநாயகம் அடிகளார் நினைவு மன்றக் குழு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1993. (திருக்கோணமலை: பிறைட்ஸ் அச்சகம்). (38) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x

12475 – தமிழ்மொழித் தின விழா மலர் 1994.

மலர்க் குழு. கொழும்பு: கொழும்பு தெற்குக் கல்விக் கோட்டம், கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஜுன் 1994. (வத்தளை: வத்தளை பிரின்டர்ஸ், 17/10, நீர்கொழும்பு வீதி). (76) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5