14990 பொற்றாமரை: பொன்விழா சிறப்பு மலர் 2012.

ப.க.மகாதேவா (மலர்க் குழுத் தலைவர்). நயினாதீவு: மணிபல்லவ கலாமன்றம், 1வது பதிப்பு, ஜுலை 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). ட, (6), 317 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 25.5×17.5 சமீ. நயினாதீவு மணிபல்லவ கலாமன்றம், தனது பொன் விழாவை 05.07.2012 அன்று கொண்டாடியவேளை வெளியிடப்பட்ட சிறப்பு மலர். நயினாதீவு வரலாற்றுப் பின்னணி (ஐ.சரவணபவன்), சர்வசமய சந்நிதிகள் (மா.வேதநாதன்), நயினாதீவின் கல்வி வரலாறு-ஒரு நோக்கு (சோ.தில்லைநாதன்), நயினாதீவு அபிவிருத்தி திறமுறைகள் (பொ.பாலசுந்தரம்பிள்ளை), மணிபல்லவம் என்பதும் நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலதாரங்களும் (கனகசபாபதி நாகேஸ்வரன்), நயினைப் புலவர்கள்: ஒரு வெட்டுமுகப் பார்வை (கிருஷ்ணபிள்ளை விசாகரூபன்), நயினாதீவின் பொருளாதாரம் அன்றும் இன்றும் (யோ.ஜெயகாந்), ஈழத்து இசை வளர்ச்சியில் நயினையம்பதி (என்.வி.எம். நவரத்தினம்), நயினாதீவு கிராமசபையும் கிராம அலுவலர்களும் (மணியான்), நயினாதீவு மக்களின் முக்கியசேவையான தபால் சேவையும் அதன் வளர்ச்சியும் (மணியான்), நயினாதீவில் அன்றும் இன்றும் வைத்தியசேவை (மணியான்), நந்தி (இ.ஜெயராஜ்), இருநூற்றாண்டு தாண்டிய எம் கலை (க.ந.ஜெயசிவதாசன்), நயினையில் நாடகக்கலை வளர்ச்சி (கனகசபை உருத்திரகுமாரன்), காதல் செய்வாள் அவள் கைதேர்ந்த கன்னி (ப.க.நவரத்தினராஜா), நயினாதீவின் விளையாட்டுத்துறை (ப.ந.உருத்திரலிங்கம்), கலை வளர்ச்சியில் மணிபல்லவ கலாமன்றம் (மு.இ.ஜெயலெட்சுமி), இதிகாசங்கள் காட்டும் வாழ்க்கை நெறி (சுப்பிரமணியம் கனகரெத்தினம்), நற்பணிகள் பல ஆற்றிவரும் நயினாதீவு சனசமூக நிலையங்கள் (நா.க.குமாரசூரியர்), இலக்கிய மேம்பாடுகளும் இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளும் (ம.நதிரா), நயினாதீவுக் கிராமத்தின் அபிவிருத்திக்கான சிலஆலோசனைகள் (கா.குகபாலன்), நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அமுதசுரபி அன்னதான சபை 1960ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டுவரை (அம்பலவாணர் சர்வானந்தராஜா), தாயன்பின் மகத்துவம் (நா.யோகநாதன்), நயினைச்சித்தர் முத்துக்குமார சுவாமிகள் (எஸ்.சோமேஸ்வரப் பிள்ளை),Fifty years ago – A subtle Revolution (P.K.Navaratnarajah, K.Sundareswaran),தொண்டர்வாழ் நயினை (தவமணி சபாநாதன்), இதய நோய்கள்-வருமுன் காப்போம் (சகாதேவன் விதூசன்), ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய யாத்திரீகர் தொண்டர் சபையும் தாகசாந்தி நிலையங்களும் (சோ.தில்லைநாதன்), விஞ்ஞானத்தின் விளைவுகள் (வே.சிந்துஜா), செய்யும் தொழிலே தெய்வம் (சோ.சரண்யா), சூழலைப் பேணுவோம் (கோ.டிலக்ஷன்), காலைக்காட்சி (இ.லஜாணனன்), ஊருக்குப் பெருமை சேர்த்த உத்தமர்களை வாழும்போதே வாழ்த்துவோம், தீவகம்- ஒரு தனிப்பட்ட பிராந்தியம் (மா.கணபதிப்பிள்ளை), மணிபல்லவத்திலிருந்து மணிபல்லவ கலாமன்றத்திற்கு ஒரு செய்தி (சி.ந.கருணாகரகுருமூர்த்தி), நயினையில் வித்தியாதானம் வழங்கும் கல்விஸ்தானங்களில் ஒரு பார்வை (வீ.கணேசராசா), மணிபல்லவத்திற்குப் பெரும் தொண்டாற்றிய சான்றோர்களைக் கௌரவப்படுத்தி திருப்திகொள்வோம், உருப்பெறுக ஒரு குலமாம் ஒருமைப்பாடு (நா.க.சண்முகநாதபிள்ளை), நித்திலத்தின் முத்தாய்நின்று புகழ் பெறுக (ப.க.மகாதேவா), மணிபல்லவ கலாமன்றம்- ஆண்டு பல்லாண்டு வாழி: பதினாறு சீர் நெடிலடி ஆசிரிய விருத்தம் (பசிக்கவி சி.பரராஜசிங்கம்), நித்திலமே என்றென்றும் நிலைந்து வாழி (கா.பொ.இ.குலசிங்கம்), இன்றைய ஈழத்தில் பாரதியார் இருந்தால் (நா.சிவராசசிங்கம்), என்ன சுகம் அந்தச் சுகம் (நா.க.சண்மகநாதபிள்ளை), மன்றம் செய்த மாபெரும் பணிகள் (கு.சரவணபவானந்தன்), பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவை யாவிலும் நனி சிறந்தனவே (வீ.ஓங்காரலிங்கம்), மணிபல்லவ கலாமன்றம் வாழி வாழி (ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), எனது சிந்தனை (ஓ.சித்தார்த்தனி), நயினைத் தீவே நீவாழ்க (த.பாலமுருகன்), நயினை பெரும்புலவர்களின் சில கவிதைகள் (தி.நிதர்சனன்), நயினை நாகம்மை-திருக்குட முழுக்காடற்பத்து (நா.க.சண்முகநாதபிள்ளை) ஆகிய படைப்பாக்கங்களை இச்சிறப்பு மலர் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53748).

ஏனைய பதிவுகள்