17035 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: 27ஆவது ஆண்டு அறிக்கை (1968-1969).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, உருத்திரா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு-6:  இராசா அச்சகம், பாமன்கடை).

8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் 1968-1969 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 27ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை 29.12.68 முதல் 27.12.69 வரையான காலத்திற்குரியது. இதுவரை காலமும் சங்கத்தில் 215 சாதாரண உறுப்பினர்களும் 83 சீவியகால உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். அறிக்கையிடப்படும் ஆண்டில் 12 சாதாரண உறுப்பினர்களும் 3 சீவியகால உறுப்பினரும் இணைந்துகொண்டுள்ளனர். இக்காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. வை.பொன்னுச்சாமி சேவையாற்றியிருந்தார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 5084).

ஏனைய பதிவுகள்

16294 தமிழ்-ஓர் அறிமுகம் (Tamil-An Introduction).

ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா. கனடா: ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா, 1வது பதிப்பு, 2018. (கனடா: அச்சக விபரம் தரப்படவில்லை). 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-0-9738750-3-4. இலங்கையில் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்ட

11705 வான் அலைகளில் தேன் துளிகள்.

என்.எம்.நூர்தீன். கொழும்பு 2: இளம்பிறை இசை மன்றம், A58, சேர் ஹென்ரி டி மெல் மாவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி). xix, 121

14695 சுவர்க்கத்து நறுமணம்: சிறுகதைகள்.

எம்.எம்.ஹிதாயத்துள்ளாஹ். பண்டாரகம: எம்.எம்.ஹிதாயத்துள்ளாஹ், அப்ழல் பதிப்பகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). viii, 118 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22.5×16 சமீ.,