10005 பொது அறிவும் பொதுஉளச்சார்பும்.

பி.உமாசங்கர். யாழ்ப்பாணம்: நல்லூர் சயன்ஸ் அக்கடமி, 1வது பதிப்பு, யூலை 2001. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், இல. 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்).

v, 68 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 70., அளவு: 20×14.5 சமீ.

போட்டிப் பரீட்சைகள், நேர்முகப் பரீட்சைகள், உள்நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றுக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு உதவும் வகையில் பொது அறிவு, பொது உளச்சார்பு ஆகிய இரு பிரிவுகளில் பொது அறிவுத் தகவல் குறிப்புகள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பொது அறிவு என்ற பிரிவின்கீழ் இலங்கையின் வரலாறு, சமூகவியல், கல்வித்துறை, உலகின் முக்கிய விடயங்கள், விளையாட்டுக்கள், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், மருத்துவம், விண்வெளி அறிவியல், சினிமாத்துறை, சர்வதேச முக்கிய தினங்கள், சர்வதேச குறியீடுகள், சுருக்கப் பதங்கள், நாடுகளின் சிறப்புப் பெயர்கள், தேசியப் பறவைகள், சின்னங்கள், விளையாட்டுக்கள், சர்வதேச நிறுவனங்கள், சர்வதேச உடன்படிக்கைகளும் வரலாற்றில் பொறிக்கப்பட்ட யுத்தங்களும், கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிப்பாளரது நாடுகளும் ஆண்டுகளும், பொதுவான விடயங்களும் அண்மைக்கால விடயங்களும் ஆகிய தலைப்புகளில் விடயங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. பொது உளச்சார்பு என்ற பகுதியில் எண்ணியலுடன் தொடர்பான திறன், ஆங்கில நெடுங்கணக்குத்திறன், கணிதத்திறன், இரகசிய குறியீட்டுத்திறன், கட்திறன், மொழித்திறன், ஆய்ந்தறிதற் திறன், கிரகிக்கும் திறன், பிரச்சினைதீர் திறன், பாய்ச்சல் பட்டிகள் ஆகிய தலைப்புகளின்கீழ் தகவல்கள் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 131496).        

ஏனைய பதிவுகள்