க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 2வது பதிப்பு, மே 1993, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1992. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், கல்வியங்காடு).
83 பக்கம், விலை: ரூபா 70.00, அளவு: 20×14.5 சமீ.
அரச சேவைகளில் ஆட்சேர்ப்புப் போட்டிப் பரீட்சைகளில் மொழி அறிவு, பொது அறிவு, பொது உளச்சார்பு, விவசாயம், கிரகித்தல் முதலான துறைகளில் பரீட்சைகள் நடத்தப்பெறுவதுண்டு. இத்தகைய பரீட்சைகளுக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட நூல் இதுவாகும். இது பொது அறிவு சம்பந்தமானதொரு மாதிரி வினா-விடை நூலாக அமைகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 97160).