இராமநாதன் றமணன். நீர்கொழும்பு: திசா வெளியீட்டகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (கொழும்பு 6: நிசா ஆர்ட்ஸ் லிமிட்டெட்).
xi, 133 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-1993-01-6.
நூலாசிரியர் என்.ஆர்.ரமணன் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் கணினித்துறை போதனாசிரியராகப் (Instructor) பணியாற்றுபவர். இந்நூல் ICT 2007, GIT 2005, 2006, 2007 ஆகிய நிறுவனங்களின் ஆண்டுப் பரீட்சைகளின் கடந்த காலப் பரீட்சை வினா-விடைகளுடன் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. தரவு உருவகிப்பும் கணினியின் உள்வாரியான செயற்பாடுகளும், தகவல் முறைமை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் ஆகிய மூன்று பிரிவுகளில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 133164).