வல்வை ந.அனந்தராஜ். வல்வெட்டித்துறை: நந்தி பதிப்பகம், தெணியம்பைத் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (யாழ்ப்பாணம்: அன்றா பிறின்டேர்ஸ், 356 V, லக்ஸன் பிளாசா கட்டிடம், கஸ்தூரியார் வீதி).
xiii, 138 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-41846-0-2.
ஒருமனிதனின் வாசிப்புத்திறனை வளர்த்தெடுப்பதில் பாடசாலை நூலகங்களின் பங்கு முக்கியமானது. கல்வி அளவிடைகளில் வாசிப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றைச் செயற்படுத்துவதில் நூலகங்களின் பங்கு முக்கியமானது. ஆனால் அந்நூலகம் முறையாக முகாமைத்துவம் செய்யப்படும் விதத்திலேயே மணவர்களின் பயன்பாட்டுப்பெறுமானம் அதிகரித்தோ குறைந்தோ செல்கின்றது. இந்நூல், நூலக முகாமைத்துவம் பாடசாலை வகுப்பறைகளிலிருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. நூலகம் இனிய வாசிப்புக்கான இடமாக இருக்கவேண்டுமேயொழிய விரக்தியை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தக்கூடாது என்பதையும் இந்நூல் தெளிவுபடுத்தகின்றது. பாடசாலை நூலகங்களில் தவிர்க்கப்படவேண்டியவை, நுலகரின் பங்கு, வாசிப்புத்திறனை ஊக்கவிக்கும் செயற்பாடுகள், நூல்சேர்க்கை, நீக்கம் தொடர்பான விபரங்கள் என்பவற்றை எழுத்துக்கள் மூலம் மட்டுமல்லாது, அழகிய வண்ணப் புகைப்படங்களின் ஊடாகவும் ஆசிரியர் விளக்கியிருக்கிறார். இன்றைய பாடசாலைகளில் நிலவும் கல்வியின் வீழ்ச்சிப் போக்குக்கான காரணங்களை இனங்கண்டு, அவற்றுக்கான பரிகாரங்களை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்ற சிந்தனையின் விளைவாக ஆய்வுகளை மேற்கொண்டு, கல்வி அபிவிருத்திக்கு அடிப்படையாக அமைந்துள்ள பாடசாலை நூலகங்களை வினைத்திறனுடையதாக செயற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 200750).