நூலக நிறுவனம். கொழும்பு 6: நூலக நிறுவனம், 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).
32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப் படுத்தி (Digitalising) ஆவணப்படுத்தும் நோக்குடன் 2005இல் தொடங்கப்பெற்ற நூலக நிறுவனத்தின் பணியின் ஏழாவது ஆண்டில் 10000 பதிவுகளைக் கண்டுள்ளதைப் பாராட்டி வழங்கப்பட்ட வாழ்த்துச் செய்திகளின் தொகுப்பாக இச்சிறுநூல் வெளிவந்துள்ளது. இந்நிறுவனத்தின் நோக்கம், பணிகள் என்பவற்றைப் பற்றிய அறிமுகத் தகவல்களையும் இந்நூலில் காணமுடிகின்றது.