மருதூர் ஏ. மஜீத். கல்முனை: மருதூர் வெளியீட்டுப் பணிமனை, 436 பழைய சந்தை வீதி, சாய்ந்தமருதூர் 03, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (கொழும்பு: யூ டீ எச் அச்சகம், மருதானை).
(22), 23-290 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-1068-09-8.
மணிப்புலவர், ஏ.மஜீத் அவர்களின் 16வது வெளியீடு இந்நூலாகும். 1979இல் சிறுகதைத் தொகுதியொன்றுடன் ஆரம்பித்த இவரது இலக்கியப் பயணம் மிக நீண்டது, தகவல் களஞ்சியமான இந்நூல் இறையியல், மனையியல், அறிவியல், விஞ்ஞானவியல், உடல்நலவியல், அரசியல், மானிடவியல், மொழியியல், அழகியல், பொதுவியல் ஆகிய பத்து பிரிவுகளில் தகவல்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 194245).