திருமலை சுந்தா (ஆசிரியர்). திருக்கோணமலை: அம்மா பதிப்பகம், 172, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (திருக்கோணமலை: அஸ்ரா பதிப்பகம், திருஞானசம்பந்தர் வீதி)
146 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ
திருக்கோணமலையிலிருந்து திருமலை சுந்தா (சி.சுந்தரலிங்கம்) அவர்களை ஆசிரியராகக் கொண்டு ‘மானுடம்’ என்ற சஞ்சிகை தை 2009 முதல் வெளிவந்துகொண்டிருந்தது. பன்னிரண்டு பக்கங்களில், தனது ஆக்கங்களையும், பிற எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் சேர்த்து 250 பிரதிகள் மாதாந்தம் அச்சிட்டு வெளியிடப்பட்ட இச்சிற்றிதழின் முதல் ஓராண்டுக்கான 11 சிற்றிதழ்களையும் இத்தொகுப்பு உள்ளடக்குகின்றது. கவிதைக்கு முக்கிய இடம் கொடுத்து இந்த இதழ் வெளியானது. சிறு கட்டுரைகளும் இலக்கியம் சார்ந்து இந்த இதழில் வெளியானது.