த.சந்திரசேகரன் (ஆசிரியர்). திருச்சி 620 003: இனிய நந்தவனம், எண் 18, பெரிய செட்டித் தெரு, உறையூர், 1வது பதிப்பு, ஜுன் 2010 (திருச்சிராப்பள்ளி 620003: புதிய சித்திரா அச்சகம், இல. 5, மிஷன் வைத்தியசாலை வீதி, உறையூர்).
64 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 10., அளவு: 21×14 சமீ.
தமிழகத்திலிருந்து வெளிவரும் இனிய நந்தவனம் மாத இதழின் இலங்கைச் சிறப்பிதழாக இம்மலர் வெளிவந்துள்ளது. இச்சஞ்சிகையின் ஆசிரியர் சந்திரசேகரன் தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழும் ஒரு ஈழத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்மொழி தமிழல்லாத தமிழ்த் தொண்டர் (த.சந்திரசேகரன்), யாழ்ப்பாண நூல்நிலையத்தின் இன்றைய நிலை (பெரிய ஐங்கரன்), இலங்கை பயணமும் சில பதிவுகளும் (நந்தவனம் சந்திரசேகரன்), நல்லெண்ணம் படைத்த நாடகப் புரட்சியாளர் (பராக்கிரம நிரியெல்லவுடனான நேர்காணல்), மறக்க முடியாத இலங்கை இலக்கியப் பயணம் (தலைநகர் க.கண்ணன்), கவிஞர் நீலாவணனின் தமிழுணர்வு (பேருவளை நபீக் மொஹிடீன்), வரலாறு கண்டிராத நூறாவது பரதநாட்டிய அரங்கேற்றம் (ராதா சிவசுப்பிரமணியம்), ஈழப் பத்திரிகை உலகில் முத்திரை பதித்த ஈழநாடு (கே.ஜீ.மகாதேவா), சவால்களுக்கிடையே வாழும் சமூகம் (செங்கை ஆழியான் நேர்காணல்) ஆகிய இலங்கை சார்ந்த கட்டுரைகள் நேர்காணல்களுடன், ஈழத்துப் படைப்பாளிகளின் நூல் விமர்சனங்கள், கவிதைகள், சிறுகதைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இச்சிறப்பு மலர் வெளிவந்துள்ளது.