10023 காலம்: செல்வா கனகநாயகம் நினைவுச் சிறப்பிதழ்.

செல்வம் (இதழாசிரியர்). கனடா: காலம், செல்வம் அருளானந்தம், 84, Coleluke Lane, Markham, Ontario, L3S 0B7, 1வது பதிப்பு, மார்ச் 2015. (இந்தியா: சென்னை 600 087: வீ.ஆர்.கிராப்பிக்ஸ், வளசரவாக்கம்).

88 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 28×21.5 சமீ., (காலம் இதழ் 46, மார்ச் 2015).

கனடாவிலிருந்து வெளிவரும் காலம் சஞ்சிகையின் சிறப்பிதழாக வெளிவந்துள்ள இவ்விதழில் வழமையான அம்சங்களுடன், சிறப்புக் கட்டுரைகளாக சமகாலத்தில் மறைந்த ஈழத்துத் தமிழ் அறிஞரான செல்வா கனகநாயகம் அவர்களின் நினைவுகளையும் அமரர் எஸ்.பொன்னுத்துரை அவர்களின் நினைவுகளையும் தாங்கிய படைப்பாக்கங்கள் சிறப்பிடம் பெற்றுள்ளன. அமரர் செல்வா கனகநாயகம் பற்றிய நினைவு மீட்டல்களை சச்சிதானந்தன் சுகிர்தராஜா, இ.பாலசுந்தரம், அமுது ஜோசப் சந்திரகாந்தன், நரசய்யா ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். செல்வா கனகநாயகம் பற்றிய எஸ்.சிவலிங்கராஜாவின் கவிதை ஒன்றும், சோ.பத்மநாதனும் புனைகவிதையும் என்ற தலைப்பில் செல்வா கனகநாயகம் எழுதிய  ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமும் இடம்பெற்றுள்ளன. எஸ்.பொ. அவர்கள் பற்றிய பதிவில் யாழ்ப்பாண எண்ணம் என்ற தலைப்பில் ம.செல்வராஜா அலெக்சாண்டர் அவர்களும், எஸ்பொவும் நானும் என்ற தலைப்பில் ஆணி என்ற புனைபெயரில் ஒரு எழுத்தாளரும் எஸ்.பொ. பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

8222 மலையகம் எழுகிறது: மலையக அரசியலில் சமூக கலாசார அமைப்புகள்.

வி.ரி.தர்மலிங்கம்.  United Kingdom: எழுநா ஊடக நிறுவனம், 4, Kettering Road, Isham, Kettering, NN14 1HQ, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (சென்னை 6000005: எஸ்.வி.பிரின்ட்ஸ்). 92 பக்கம், விலை:  இந்திய ரூபா

17083 கலாநிதி. எம்.ஏ.எம்.சுக்ரியின் சிந்தனைகள்.

எம்.ஏ.எம்.சுக்ரி (மூலம்), நௌபாஸ் ஜலால்தீன் (தொகுப்பாசிரியர்). பேருவளை: நளிமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகம், அபிவிருத்தி,ஆய்வு மற்றும் பயிற்றுவிப்புக்கான நிறுவனம், Academy for Development, Research and Training (ADRT), P.O.Box 01,1வது பதிப்பு, டிசம்பர்