எஸ்.சிவநிர்த்தானந்தா (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: CSDI பிரிவு, வலயக் கல்வி அலுவலகம், 1வது பதிப்பு, 2011. (திருக்கோணமலை: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ், 43, திருஞானசம்பந்தர் வீதி).
xii, 270 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.
திருக்கோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின் ஆக்கத்திறன் ஆவணப்படுத்துதல் தகவற் பிரிவு (CSDI – Creative Skill Documentation and Information Unit) என்னும் அலகின் முன்னெடுப்பில் 2009ஆம் ஆண்டு முதல் வெளியிடப்படும் கல்வித்துறை ஆண்டு மலரின் மூன்றாவது வெளியீடு இதுவாகும். அப்பிரதேசத்தின் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் கல்வியியலாளர்களின் பல்துறை ஆய்வுகள், ஆக்கங்கள் என்பன பல்வெறு கட்டுரைகளின் வாயிலாக இதில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சிங்கள மொழிமூலம் எழுதப்பட்ட கட்டுரைகளும் இவற்றில் அடங்கியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50683).