அமலை ஜனகன் (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் தமிழ் மன்றம், இலங்கைச் சட்டக் கல்லூரி, 244. புதுக்கடை வீதி, 1வது பதிப்பு, 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(4), 202 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×20.5 சமீ.
இலங்கைச் சட்டக்கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 2014ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலர் (ஆட்சி 65, முரசு 49) பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. அரசியல், சட்டம், சமூகம், தகவல் தொழில்நுட்பம், மொழி, வணிகம் ஆகிய பிரிவுகளின்கீழ் தமிழ், ஆங்கில மொழிக் கட்டுரைகள், கவிதைகள் என்பன இடம்பெற்றுள்ளன. துரித வடமாகாண அபிவிருத்தி (க.வி.விக்னேஸ்வரன்), இலங்கையில் மொழிக்கொள்கையின் வெளிப்பாடு (ஞானசிங்கம் செல்லத்துரை), இலங்கையின் ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை தொடர்பான விமர்சனங்கள் (சிவகுமார்), சட்டவாட்சியினதும் சட்டத்தின் கீழான ஆட்சியினதும் நிலை இலங்கையில் திருப்திகரமானதாக உள்ளதா? (சிவலிங்கம் புராதனி), கவிதை-ஆசியாவின் அதிசயம் (வினோதன் மயில்வாகனம்), இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் சட்ட நிலைமை (மதிவாளன் தம்பிராசா), அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பான ஒரு சட்டப் பார்வை (யாதவன் நல்லையா), நிரபராதிகளும் தவறான தண்டித்தல்களும் (B.H.அப்துல் யஸாஸ்), இலங்கையின் நீதி நிர்வாகத்தில் மனோதத்துவத்தின் பயன்பாடு (சுபாஷினி ரவிகரன்), முஸ்லிம் சட்டத்தின் கீழ் விவாகரத்து (A.J.மொஹமட் நவாஸ்), தொடர்மாடிக் குடியிருப்புகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் (அமலை ஜனகன்), இலங்கையில் DNA சான்று (டிலக்ஷனா ஜெயகாந்தன்), இலங்கையில் குற்றவியல் வழக்குகளும் ஊடகங்களும் (பாத்திமா ஷிபானா), கவிதை- நீதி புதைந்த நிலம் (சரிதா விமலரமணன்), அநாவசியமாக அரசியலாக்கப்பட்டு கானல் நீராகிப்போன யாழ்ப்பாணத்தக்கான குடிநீர் (இரா.சிவச்சந்திரன்), இலங்கை இந்திய மீன்பிடிப் பிரச்சினைக்கான தீர்வு காணல் (சிவசேகரம் ராம்குமார்), ஊடக தர்ம ஒழுக்கக் கோவையை விதிப்பது ஊடக தணிக்கையைவிட பாரதூரமானது (சாரங்கன் நாகலிங்கம்), கவிதை- மலையகத்தின் மனக்குமுறல் (இர்பியா ஷெரீப்), கவிதை- பிணம் தின்னும் கழுகுகள் (ரொஷானி செந்தில்செல்வன்), இணையம் இலத்திரனியல் வணிகம் மற்றும் அந்தரங்க பாதுகாப்பு (வி.அன்புநேசன்), கவிதை- என் இனிய கணனியே (குலேந்திரராஜா தசரதன்), தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து (முரளி மனோகர்), பெண்சிலையே நீ பென்சிலாகவாவது மாறு (தர்மினி சந்திரமோகனம்), தமிழ்மொழிக் கல்வியின் அவசியமும் ஆங்கிலத்தின் தேவையும் (யாழினி தயாநந்தன்), கவிதை- என் மொழி (சுமித்ரா பாலமுரளி), கவிதை-இதுதான் கவிதையா? (மகாதேவா நிராதரன்), கவிதை- வரவேற்பு விளம்பரம் (சி.சிவசேகரம்) ஆகிய 27 தமிழ் ஆக்கங்களும் 12 ஆங்கில ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57977).