10030 மண்சஞ்சிகை: 25வது ஆண்டு விழா மலர்.

வ.சிவராசா (மலராசிரியர்). ஜேர்மனி: மண்- Erde, Am Windhovel 18A, 47249 Duisburg, 1வது பதிப்பு,மே 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).

82 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.

14.01.1990 முதல் ஜேர்மன் நாட்டின் டுயிஸ்பேர்க் நகரிலிருந்து வ.சிவராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் சஞ்சிகையான மண் – தனது 25ஆவது ஆண்டை வெள்ளிவிழா ஆண்டாகக் கொண்டாடிய 02.05.2015 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு மலர். மலரின் வளர்ச்சிக்கான வாழ்த்துரைகளை பெரும்பான்மையாகக் கொண்டு சில பொதுவான கட்டுரைகளையும் இடையிடையே உள்ளடக்கியதாக இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழையும், கலை இலக்கியங்களையும் ஜேர்மனியில் வளர்ப்பதற்கப்பால், தாயகத்தில் வாழும் உறவுகளுக்கு நிதியுதவிகளைச் சேகரித்து வழங்கும்பணியும் மண்சஞ்சிகைக் குழுமத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. இவைபற்றிய ஆவணமாகவும் இம்மலர் உள்ளது.

ஏனைய பதிவுகள்