க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
252 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 29×20.5 சமீ.
2012இல் ஈழத்தில் இருந்துவரும் சிறந்த சஞ்சிகைக்கான ‘சின்னப்ப பாரதிவிருது’, சிறந்த சிற்றிதழுக்கான ‘இனிய மணா இலக்கிய விருது’ முதலிய விருதுகளை இந்தியாவில் பெற்றுக்கொண்ட சிற்றிதழ் ஜீவநதியாகும். உளவியல் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ், பெண்ணியச் சிறப்பிதழ், இரண்டு கவிதைச் சிறப்பிதழ்கள், இளம் எழுத்தாளர்களுக்கான சிறப்பிதழ், கே.எஸ். சிவகுமாரன் சிறப்பிதழ், சட்டநாதன் சிறப்பிதழ், அவுஸ்திரேலியச் சிறப்பிதழ், கனடாச் சிறப்பிதழ், மலையகச் சிறப்பிதழ், திருகோணமலைச் சிறப்பிதழ், பொங்கல் சிறப்பிதழ் முதலிய பல சிறப்பிதழ்களும் இதுவரை வெளிவந்துள்ளன. இதனைவிட ஒவ்வொரு ஆண்டும் ஓர் ஆண்டிதழ் வெளிவருகின்றது. அல்வாய் கலையகத்தினால் வெளியிடப்படும் ஜீவநதி கலை இலக்கிய இருதிங்கள் ஏட்டின் 75ஆவது இதழாக, கவிதைச் சிறப்பிதழாக இவ்விதழ் வெளிவந்துள்ளது. வழமையான கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றுடன் ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. ந.மயூரரூபன், த.ஜெயசீலன், கே.எம்.செல்வதாஸ், ஏ.எச்.எம்.நவாஸ், கிருஷ்ணபிள்ளை நடராசா, வி.மைக்கல் கொலின், அநாதரட்சகன், மொழிவரதன், இ.சு.முரளிதரன், மல்லியப்பு சந்தி திலகர், அ.யேசுராசா, இ.இராஜேஸ்கண்ணன், தாமரைத்தீவான், ந.சத்தியபாலன், கே.எஸ்.சிவகுமாரன், மேமன்கவி, அஸ்வத்தாமன், கெக்கிறாவ ஸூலைஹா, சமயவேல், சமரபாகு சீனா உதயகுமார், அ.பௌநந்தி, செ.யோகராசா, சிறீபுவிதா, இப்னு அஸூமத், பெரிய ஐங்கரன், யாத்ரீகன், சோ.பத்மநாதன், த.கலாமணி, உமா வரதராஜன், புலோலியூர் வேல்நந்தன் ஆகியோரின் ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.