கு.ஐங்கரன், இ.ஜெயமூர்த்தி (மலர்க்குழு). யாழ்ப்பாணம்: இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம், இணுவில்-மானிப்பாய் வீதி, இணுவில் தெற்கு, இணுவில், 1வது பதிப்பு, மே 2002. (இணுவில்: ஐங்கரன் டொட் கொம், ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலடி).
(12), 64 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×12.5 சமீ.
இணுவில் சனசமூக நிலையத்தின் பொது நூலகம் சொந்தமான அடுக்குமாடித் தனிக்கட்டிடமொன்றில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நிகழ்வு 26.5.2002 அன்று சம்பிரதாயபூர்வமாக நடைபெற்ற வேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். ஆசியுரை, தலைவர் உரை, மலராசிரியர் உரை, வாழ்த்துரை, கட்டுரைகள், சமய சமூக நிறுவனங்களின் வாழ்த்துச் செய்திகள், கவிதை நாடகம், அறிவியல் தரவுகள், நூலக விபரம், பொருளாளர் அறிக்கை, நன்றியுரை ஆகிய விடயங்களுடன் அன்றைய தின நிகழ்ச்சி நிரலையும் இம்மலர் கொண்டிருக்கிறது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23775).