பிரதேச கலாசாரப் பேரவை. வவுனியா: வவுனியா பிரதேச கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1995. (வவுனியா: கலைமகள் அச்சகம்).
128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×19 சமீ.
வவுனியா பிரதேச செயலகப் பிரிவினால் நடத்தப்படும் இலக்கிய விழாவையொட்டி 16.09.1995இல் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். வவுனியா பிரதேச கலாசாரப் பேரவைத் தலைவராக அகளங்கன் பணியாற்றியிருந்தார். போட்டிகளில் பரிசுபெற்றோர் விபரங்களையும், பரிசுபெற்ற (கவிஞர் கண்ணையா) விழாக் கீதத்தையும் முதற்பகுதியிலும் கலைஞர் பட்டியலை நூலின் இறுதியிலும் காணமுடிகின்றது. இடையில் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்பன இடம்பெறுகின்றன. 20ம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதை இலக்கியம் (செ.அழகரெத்தினம்), 20ம் நூற்றாண்டில் தமிழ் நாடகப் போக்கு (க.ஸ்ரீகணேசன்), 20ம் நூற்றாண்டில் புனைகதை இலக்கியம் (ந.ரவீந்திரன்), தாலி (சிறுகதை-யாமினி), சூழலும் அபிவிருத்தியும் (மா.செ.மூக்கையா), மாலைக் காட்சி (கவிதை-வை.சுதர்சினி), சங்கத்தமிழில் அறமும் புறமும் (மே.அற்புதராசா), ஒரு முடங்கலுக்கு முகவரி தேவை (கவிதை-மங்களராணி சுப்பிரமணியம்), குறளும் சிலம்பும் (அகளங்கன்), கவித் துளிகள் (தி.மகேஸ்வரராசா), வன்னிப் பிரதேச தமிழ் முஸ்லிம் உறவுகள் (எஸ்.அப்துல் சமட்), பண்டைய இலக்கியம்- பரிசுக் கட்டுரை (கோ.செல்வகுமார்), ஆடல் பாடல் (துவாரகா கேதீஸ்வரன்), வவுனியாவும் செய்தித் துறையும் ஒரு வெட்டுமுகம் (பி.மாணிக்கவாசகம்), விழாவும் மலரும் (உடுவை எஸ்.தில்லை நடராஜா), மனைவி-மனுஷி (சிறுகதை- க.நிறைமதி), சமயமும் பெண்கள் வாழ்வும் (புவனா ஐயம்பிள்ளை), சிற்பக்கலை (சு.சண்முகவடிவேல்), வன்னி இராச்சியத்தின் நாட்டுக்கூத்துக்கள் (ச.விஜயரெத்தினம்), 90களில் வவுனியாவில் கலை கலாசார முயற்சிகள் (ஓ.கே.குணநாதன்), நாட்டுப்புற இயலில் நாட்டார் பாடல்கள் (வி.ஜெயக்குமார்), அழகியற் கலைகளால் ஏற்படும் தெய்வீக உணர்வு (வேல்விழி சூரியகுமாரன்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரை அலங்கரிக்கின்றன.