10036 கொழும்புத் தமிழ்ச்சங்கப் புதிய கட்டிடத் தொகுதியின் இரண்டாவது மாடித் திறப்பு விழா மலர் 03.04.2005.

வீ.ஏ.திருஞானசுந்தரம் (மலர்க்குழுத் தலைவர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (கொழும்பு:  அச்சக விபரம் தரப்படவில்லை).

54 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×17.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. ஆரம்பத்தில், சொந்த இடம் இல்லாத காரணத்தினால் கொழும்பு 6, காலி வீதியில், இல.292ஆம் இலக்க இல்லத்திலும், தொடர்ந்து 32ஆம் ஒழுங்கை, இல.18இலும், சென் லோரன்ஸ் வீதி, இல. 50இலும், பெரேரா ஒழுங்கை, இல. 51இலும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் இயங்கி வந்தது. 1950இல் தற்போதைய இடத்தில் 42 பேர்ச் பரப்பளவுள்ள காணியொன்றை கொள்வனவு செய்து அதில் சங்கத்திற்கெனச் சொந்தமானதொரு கட்டடம்; அமைக்க ஒழுங்கு செய்யப்பட்டது. 1974ம் ஆண்டு வரை இச்செயல் கைகூடவில்லை. 1975இல் முற்பக்கக் கட்டிடம் அமைக்கப்பட்டு, 1980இல் மூன்றாம் மாடியும், 1990இல் நான்காம் மாடியும் நிறைவு பெற்றது. பின்னர் பின்பக்கத்தில் சங்கரப்பிள்ளை மண்டபம் 25.7.1998இல் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுபெற்றது. இதைத் தொடர்ந்து 1ம் மாடி நூலகக் கட்டிடப் பணி ஆரம்பிக்கப்பட்டு 28.5.2001இல் திறப்பு விழா நடைபெற்றது. தற்போது 2ம் மாடிக் கட்டிடம் 3.4.2005இல் பூர்த்தியாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவ்வேளையில் இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36137).

ஏனைய பதிவுகள்

16821 பதுறு மவ்லிது : மூலமும் மொழிபெயர்ப்பும்.

அல்லாமா  மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) (அறபு மூலம்), ஜமாலிய்யா அஸ்ஸயித் கலீல் அவ்ன் அல்ஹாஷிமிய் மௌலானா (தமிழாக்கம்). திருச்சி 620001: ஜமாலிய்யா பதிப்பகம், 35, இரண்டாவது தெரு, செல்வநகர், திண்டுக்கல் ரோடு, 4வது

12799 – கனவுலகம்.

ஜுனைதா ஷெரீப் (இயற்பெயர்: மொஹமட் ஷெரீப், கச்சி மொஹமட்). காத்தான்குடி: ஜுனைதா ஷெரீப், 27, லேக் றைவ், 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 10: யூ.டீ.எச். கம்ப்யுபிரின்ட், 51ஃ42, மொஹிதீன் மஸ்ஜித் வீதி). xiii,