அகளங்கள் (மலராசிரியர்). வவுனியா: சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், 1வது பதிப்பு, ஜுன் 1999. (வவுனியா: சுதன் அச்சகம்).
70 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
12.06.1999 அன்று திறந்து வைக்கப்பட்ட கலாசார மண்டபத்தின் திறப்புவிழாவையொட்டி வெளியிடப்பட்ட மலர். இம்மண்டபம் மேற்படி சங்கத்தின் சேக்கிழார் மண்டபத்தின் மேல் தளமாக அமைக்கப்பட்டுள்ளது. வழமையான ஆசியுரை, வாழ்த்துரைகளோடு, திருக்கேதீச்சரம், கோணேஸ்வரம் ஆகிய திருத்தலங்களின்பேரில் திருஞானசம்பந்தர், சுந்தரர், ஆகியோர் பாடிய தேவாரப் பதிகங்களையும், அருணகிரிநாதர் பாடியருளிய கதிர்காமம், திருக்கோணமலை, நல்லூர், கந்தவனம் பற்றிய திருப்புகழ்ப் பாடல்களையும் சிவராத்திரி புராணச் சிவதோத்திரத்தையும் இம்மலரில் இணைத்துள்ளனர்.