மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
xvi, 270 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 24.5×17 சமீ.
தொல்காப்பியவியல் (தொல்காப்பியர்: தமிழ் மரபின் காவலர்/க.இரகுபரன், தொல்காப்பியமும் தொனிக் கோட்பாடும்/துரை.சீனிச்சாமி), உரை மரபியல் (தமிழ் உரை உருவாக்க மரபு: தோற்றம்-பண்புகள்-பயன்கள்/வீ.அரசு, யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரங்களின் தோற்றமும் உரைநடை வளர்ச்சியும்/எஸ்.ஜெபநேசன்), ஆளுமைகள் (அறிவியல் தமிழ் முன்னோடி டாக்டர் சாமுவேல் பி.கிறீன்/தெ.மதுசூதனன், ஆறுமுக நாவலர்: உரைநடை பரிமாணம்/இரா.கமலக்கண்ணன்), மதவியல் (பல்பண்பாட்டுச் சூழமைவில் கிறிஸ்தவத்தின் ஏற்பிசைவு/அருட்திரு தமிழ்நேசன் அடிகள், தமிழக இஸ்லாமியத்தின் இன்னொரு பக்கம் சூபிசம்-வகாபிசம்/மு.நஜ்மா, புத்த நெறியும் பக்தி வழியும்/அ.மார்க்ஸ், திறனாய்வியல் (தமிழ்த் தடத்தில் இரு கோட்பாடுகள்/சபா.ஜெயராசா, திறனாய்வின் தேடல்: பின்னைக் காலனித்துவச் சூழலில்/தி.சு.நடராஜன்), கவிதையியல் (கவிதை ஆய்வு/செ.வை.சண்முகம், புதுக்கவிதையில் சங்கக் கவிதை: மரபும் மொழியும்/ஆர்.ராஜகோபாலன், நவீன கவிதைகளில் காலப் பிரக்ஞை/ஆனந்த், எதிர்கால ஈழத்து நவீன தமிழ்க் கவிதை: வளமும் வலுவும் நோக்கி/செ.யோகராசா, நவீன தமிழ்க் கவிதைப் புலத்தில் ஈழத்துப் பெண் கவிஞர்கள்/சி.ரமேஷ்), புனைவியல் (ஈழத்துத் தமிழ் நாவல்: சில அரசியல் பிரதிகள்/டி.சே.தமிழன், ஈழத்துப் படைப்பிலக்கிய மரபில் ஒரு புதிய நாவல்/மு.புஷ்பராஜன், சமூக வரலாற்றுப் பின்புலத்தில் புதுமைப்பித்தனின் துன்பக்கேணி/ஆ.சிவசுப்பிரமணியன்), சிறார் இலக்கியவியல் (ஈழத்துத் தமிழ் சிறுவர் இலக்கியங்கள்: சில அவதானங்கள்ஃதம்பு சிவசுப்பிரமணியம்) ஆகிய எட்டுப் பிரிவுகளில் 20 ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இறுதிப் பகுதியில், கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடந்த வழி/மு.கதிர்காமநாதன், தமிழ்ச்சங்கம் நீடு வாழி/ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.