கு.அஜித்குமார் (பிரதம இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: புதிய நிலா வெளியீட்டுக் கழகம், சாமியன் அரசடி, கரவெட்டி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (யாழ்ப்பாணம்: கக்ஸ்ரொன் பிரின்டர்ஸ், பருத்தித்துறை வீதி, 3ம் கட்டை).
viii, (4), 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ., ISBN:
மாணவரிடையே கல்வியை முதன்மை நோக்காகக் கொண்டு கரவெட்டியில் இயங்கும் புதிய நிலா வெளியீட்டுக் கழகம், தமக்கென ஒரு கட்டிடத்தை பெற்று அதனை திறந்துவைத்த வேளையில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இது. 16.1.2008 முதல் மாணவர்களிடையே பொது அறிவை வளர்ப்பதற்கும் கணிதபாடத்தை வளர்த்தெடுக்கும் நோக்குடனும் பொது அறிவுச் சஞ்சிகையொன்றினை வெளியிட்டும் பொது அறிவுப் பொட்டிகளையும் கணிதப் பரீட்சைகளையும் நடத்தி பரிசுகள் வழங்கி ஊக்குவித்தும் வருகின்றது. இம்மலரில் பல்வேறு துறைசார்ந்த 34 படைப்புகள் இடம்பெற்றுள்ளன. மழையும் மனிதர்களும், ஆளுமை, குரங்கின் கூர்ப்புக் கொள்கை, இந்துக்களது வாழ்வியலில் சோதிடக்கலை பெறும் முக்கியத்துவம் போன்ற இன்னோரன்ன சுவையான தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56755).