நா.செல்லப்பா. யாழ்ப்பாணம்: நா.செல்லப்பா, 127, பிறவுண் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1977. (கொழும்பு 12: தாளையான் அச்சகம், 115, மெசஞ்சர் வீதி).
24 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 21×15 சமீ.
சித்திரச் சுடரொளி ஆசிரியர் திரு. நா.செல்லப்பா அவர்களின் அறுபதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக வெளியிடப்பட்ட சஷ்டியப்த பூர்த்தி மலர். தியானசாதனைக்கு வழிகாட்டியாக இந்நூல் நா.செல்லப்பா அவர்களால் எழுதப்பட்டுள்ளது. முன்னுரை, அறிவு அறியாமை, மனமெனும் மாயக் குரங்கு, புனிதமான பக்தி, சிவோகம் பாவனை, அறிதுயிற் தியானம், உள்ளொளி, சிவஞானபோத சாதனை, சவிகல்ப தியானம், மனத்தின் அறிவு திரிபுடி ஞானமாகும், இவ்வழி ஒரு கலையாகும், யோகம் ஒரு கலையாகும், தத்துவஞான விளக்கம், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், திருவருட்சக்தி பாய்தல், சிவலிங்க தியானம், நிர்விகல்ப தியான சாதனை, முடிபுரை ஆகிய 18 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2932).